You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டன் விசாவில் அதிரடி மாற்றம் - இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட்டா?
பிரிட்டனில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் பல புதிய பரிந்துரைகளை அறிவித்துள்ளது.
பிரிட்டனில் தங்கி படிக்கும் பல உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து பட்டம் பெற்றபின், இரண்டு ஆண்டுகள்வரை பிரிட்டனில் தங்கி வேலை தேடி கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், 2012ஆம் பிரிட்டன் உள்துறை செயலராக இருந்த தெரீசா மே எடுத்த முக்கிய முடிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தெரீசா மே காலத்தில், ஒரு வெளிநாட்டு மாணவர் பிரிட்டனில் படித்து பட்டம் பெற்றபிறகு 4 மாதங்களுக்குள் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட வேண்டும். தற்போது, அந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சன், மாணவர்கள் பிரிட்டனில் வேலைவாய்ப்பை தொடங்கவும், முழு திறனை வெளிப்படுத்தவும் இந்த மாற்றம் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசின் இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மைக்ரேஷன் வாட்ச் என்ற பிரசார குழு, அரசின் நடவடிக்கை பிற்போக்கானது என சாடியுள்ளது.
யாருக்கெல்லாம் இந்த உத்தரவு பொருந்தும்?
பிரிட்டனில் அடுத்த ஆண்டு முதல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
மேலும், கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் குடியேற்றத்துக்கான ஆவணங்களை சரியாக வைத்திருத்தல் அவசியம்.
பிரிட்டன் அரசின் இந்த அறிவிப்பு, யுகே பயோபேங்கின் 200 மில்லியன் பவுண்ட் மதிப்பு கொண்ட மரபியல் திட்டத்தின் தொடக்கத்துடன் ஒத்துப் போகிறது. சுமார் 5 லட்சம் பிரித்தானியர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் மாதிரிகளை இந்த யுகே பயோபேங்க் கொண்டுள்ளது.
பல ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட இந்த தரவுகளை உலகிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயன்படுத்தி கொண்டு நோய்களுக்கான புதிய சிகிச்சைகளை கண்டுபிடிக்கலாம்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் என்ன சொல்கிறார்?
சர்வதேச ஒத்துழைப்பின் மையமாகப் பிரிட்டன் இருந்திருக்கிறது என்பதற்கு பெருமைமிகு வரலாறு இருக்கிறது என்று குறிப்பிட்ட ஜான்சன், உலகிலேயே மிகப்பெரிய மரபியல் ஆய்வு திட்டத்துக்காகச் சர்வதேச நிபுணர்களை நாங்கள் ஒன்றிணைக்கிறோம் என்றும், இத்திட்டம் அச்சுறுத்தும் நோய்களிலிருந்து மக்களின் உயிரை காக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, பிரிட்டன் அரசின் இந்நடவடிக்கை உலகளாவிய பார்வை என்றுஉள்துறை செயலர் பிரித்தி பட்டேல் கூறியுள்ளார்.
பிரிட்டன் அரசின் தற்போதைய அறிவிப்பின்கீழ், மாணவர்களின் எண்ணிக்கையில் எவ்வித கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. அதேபோல், மாணவர்கள் எவ்விதமான வேலையும் தேடிக் கொள்ளலாம்.
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தெரீசா மே உள்துறை அமைச்சராக இருந்தபோது இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்த போது, குடியேற்றம் விதிகள் தொடர்பாக ஒர் எதிர்ப்பு சூழல் நிலவுவதாகவும், ஒட்டுமொத்த குடியேற்றத்தின் அளவை சில ஆயிரங்களாக குறைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
- "திருமணம் செய்து கொள்வதுதான் விவாகரத்துக்குக் காரணம்" #SayItLikeNirmala
- ஐஃபோன் 11 அறிமுகம்: அதிக கேமிராக்கள், துல்லிய நைட்மோட் - என்னென்ன சிறப்பம்சங்கள்?
- இரட்டை கோபுர தாக்குதல்: அன்று நடந்தது என்ன? - புகைப்படங்களின் சாட்சியம்
- நான் ஏன் ஹிஜாப் அணிந்து ஆபாசக் காட்சியில் நடித்தேன்? - பிபிசியிடம் பேசிய மியா கலிஃபா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்