ரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு ஏவுகணை சோதனை மற்றும் பிற செய்திகள்

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஏவுகணை பரிசோதனை பல விதமான கேள்விகளையும், ஐயங்களையும் எழுப்பி உள்ளது.

அண்மையில் ஏவுகணையின் என்ஜின் வெடித்ததில் ஐந்து ரஷ்ய அணு விஞ்ஞானிகள் பலியானார்கள். அவர்களின் உடல், மாஸ்கோவிலிருந்து கிழக்கே 373 கி.மீ தொலைவில், அணு ஆயுதங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் இருக்கும் சரோவ் பகுதியில் புதைக்கப்பட்டது.

அணு சக்தி என்ஜினை சோதனை செய்தோம் என்கிறது ரஷ்ய அரசு அணு முகமை. ஆனால், இதற்கு மேல் அவர்கள் எந்த தகவலையும் அளிக்கவில்லை.

இந்த சோதனையானது ஆர்க்டிக் பெருங்கடலில் நடந்துள்ளது.

ரஷ்யா முன்னரே கப்பலில் இருந்து ஏவப்படும் அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ஆனால், கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது எது மாதிரியான அணு சக்தி பொறி என்பதை அவர்கள் விளக்கவில்லை.

ஏவுகணை விபத்துக்குள்ளாகி வெடித்த சில நிமிடங்களிலேயே நாற்பது நிமிடங்களுக்கு அணு கதிர் வீச்சு சியவரோவின்ஸ்க் பகுதியில் அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியானது ஏவுகணை சோதனை செய்யப்பட்ட ஒயிட் கடல் பகுதியிலிருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கிறது.

ஆனால் நோய் ஏற்படுத்தும் அளவுக்கு அணு கதிர்வீச்சு உயரவில்லை என்கிறார்கள் அம்மக்கள்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பொறியாளர்கள் ரோஸடாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Presentational grey line

கேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள்

கேரளா வெள்ளம்

பட மூலாதாரம், ATUL LOKE

"வெள்ளத்தால் சூழப்பட்டு வரும் எங்களது வீட்டிலிருந்து மனைவியையும், மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்வதற்கான வழியை தேடுவதற்காக அவர்களை விட்டு சென்றேன். கிட்டத்தட்ட அரைமணிநேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, வீடு வெள்ளத்தில் சூழப்பட்டுவிட்டது. எனது மனைவியையும், மகனையும் அங்கு காணவில்லை" என்று கூறுகிறார் லாரன்ஸ். தற்போது தனது பன்னிரண்டு வயது மகனை மட்டும் கண்டறிந்த அவர், வயநாட்டிலுள்ள பள்ளி ஒன்றில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாமில் வசித்து வருகிறார்.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கடும் மழைப் பொழிந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆகஸ்டு 8ஆம் தேதி, வயநாட்டிலுள்ள பச்சக்காடுமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்து வீடுகளோடு அதில் வாழ்ந்து வந்த மக்களும் அடியோடு புதைந்துவிட்டனர். இதுவரை பத்து பேரின் உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.

Presentational grey line

கொள்ளையர்களை அடித்து விரட்டிய வயதான நெல்லை தம்பதி

நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் நகை பறித்த முகமூடி கொள்ளையர்களை, வயதான கணவன் மனைவி இருவரும் சேர்ந்து போராடி விரட்டிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தில் விவசாயி சண்முகவேலு மற்றும் அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் நேற்று வீட்டில் இருந்த சமயத்தில் வீட்டிற்குள் முகமூடி அணிந்திருந்த இருவர் அரிவாளுடன் புகுந்தனர்.

Presentational grey line

வெள்ளிப் புதையலை தேடி 22 ஆண்டுகளாக அலைந்து திரிபவரின் கதை

வெள்ளிப் புதையலை தேடி 22 ஆண்டுகளாக அலைந்து திரிபவரின் கதை

பட மூலாதாரம், Alamy

கலிஃபோர்னிய பேய் நகரமான செரோ கோர்டோவில் ராபர்ட் லூயிஸ் டெஸ்மரைஸ் மட்டுமே வசிக்கிறார். அங்கு அவர் கடந்த 22 ஆண்டுகளாக வெள்ளிப் புதையலை தேடி வருகிறார்.

70 வயதாகும் முன்னாள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான டெஸ்மரைஸ், பள்ளியில் பணிபுரிந்துக் கொண்டிருந்த காலத்தில், விடுமுறையின்போது யாருமில்லா இடங்களுக்கு சென்று உலோகத்தாதுக்களை தேடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் பரபரப்பு நிறைந்த நகர வாழ்க்கையை விடுத்து, அதையே தனது முழுநேர வேலையாக மாற்றிக்கொண்டு, "மலைப்பகுதியில் நட்சத்திரங்களுக்கு கீழே வாழத் தொடங்கினார்."

Presentational grey line

பா.ஜ.கவை நெருங்கும் ரஜினிகாந்த்: அரசியல் ரீதியாக பலனளிக்குமா?

ரஜினி

பட மூலாதாரம், Getty Images

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில், பா.ஜ.க. தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை புகழ்ந்து பேசிய ரஜினி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவையும் வெகுவாக ஆதரித்துள்ளார். சட்டமன்ற தேர்தலின்போது நேரடி அரசியலில் ஈடுபடப்போவதாக சொல்லியுள்ள ரஜினிகாந்த், பா.ஜ.கவை வெகுவாக ஆதரிப்பது ஏன்?

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் கடந்த இரண்டாண்டு கால அனுபவங்கள் அடங்கிய `கவனித்தல் கற்றல் வழிநடத்துதல்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: