சோமாலியா: வரைபடத்தில் பக்கத்து நாட்டை தன் நாட்டோடு சேர்த்து கொண்ட எத்தியோப்பியா

சோமாலியா காணாமல் போனது எப்படி?

தாங்கள் தயாரித்த வரைபடத்தில் பக்கத்து நாடான சோமாலியாவை தங்கள் நாட்டோடு சேர்த்து கொண்டதற்காக எத்தியோப்பியா வெளியுறவுத் துறை அமைச்சகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்காக ஓர் அறிக்கையில் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது அந்நாடு.

அந்த வரைப்படத்தில், சோமாலியா இல்லாத அதே நேரம், சுதந்திர நாடாக அறிவித்து கொண்ட ஆனால் உலகம் அங்கீகரிக்காத சோமாலிலாண்ட் இருந்தது.

ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா?

"Designed by Apple in California. Assembled in China" இந்த வரிகளைதான் ஆண்டாண்டு காலமாக உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் பல்வேறு தயாரிப்புகளில் பார்த்து வருகிறோம். ஆனால், இந்தியா, வங்கதேசம், இந்தோனீசியா போன்ற அதிக மக்கள் தொகையை கொண்ட ஆசிய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளில் 'Made in China' என்ற வார்த்தையை திறன்பேசி மட்டுமல்லாது தினசரி வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

இலங்கையிலிருந்து லட்சத் தீவிற்கு சென்றார்களா ஐஎஸ் குழுவினர்?

இலங்கையிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவின் லட்சத் தீவிற்கு சென்றுள்ளமை தொடர்பில் இலங்கை பாதுகாப்பு பிரிவிற்கு இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார இதனை தெரிவித்தார்.

மாட்டிறைச்சி தொடர்பான ஃபேஸ்புக் பதிவிற்காக பழங்குடியின பேராசிரியர் கைது

மாட்டிறைச்சி தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் பதிவிட்ட ஒரு பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த பேராசிரியர் மற்றும் நாடக நடிகருமான ஜீதராயி ஹான்சதாவை ஜார்கண்ட் மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹான்சதா, ஜெம்ஷெட்பூர் கோஆப்பரேடிவ் கல்லூரி பேராசிரியர் ஆவார். நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்துள்ள அவர், அவ்வப்போது சில தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியின நாடகங்களில் கலந்து கொள்வார்.

`அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்துவோம்`

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தொல். திருமாவளவன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :