You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபேஸ்புக்: 600 மில்லியன் பாஸ்வோர்ட்கள், குறைப்பாட்டை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு நிபுணர் மற்றும் பிற செய்திகள்
மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்ட்கள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் 20,000 ஊழியர்களால் மிகச் சுலபமாக அணுகும் வகையில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு குறைப்பாட்டை, பாதுகாப்பு வல்லுநர் பிரையன் கிரெப்ஸ்தான் முதலில் சுட்டிக்காட்டினார். ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 600 மில்லியன் பயனர்களின் லாகின் பாஸ்வேர்ட்கள் வெறும் சாதாரண எழுத்து வடிவில் சேகரிக்கப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டிலிருந்து லாகின் பாஸ்வேர்ட்கள் இவ்வாறு வெளியாகியிருக்கலாம் என்கிறார் பிரையன்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்குள்ளான நெட்வர்க்கில் பாஸ்வோர்ட்கள் குறித்த கோளாறு ஒன்றை சரி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, பிரையன் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டுப்புற கலைகளுக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் மதிப்பு இந்தியாவில் ஏன் இல்லை?
தமிழகத்தின் பாரம்பரிய கலையான பொய்க்கால் குதிரையை அவரது கணவருடன் சேர்ந்து தனது 67 வயதிலும் ஆடிக் கொண்டிருக்கிறார் காமாட்சி. அவரது கணவரான, கலைமாமணி நாடிராவுக்கு வயது 75. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரும் இன்னும் இந்தக் கலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகால மத்திய அரசின் ஆட்சி எவ்வாறு இருந்தது என்றும், வரப்போகும் புதிய பிரதமரிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள, நாம் தமிழகத்தின் சில இடங்களுக்கு பயணித்தோம்.
அப்போது கலைத்துறையில் இருக்கும் இந்த தம்பதிகளையும் சந்தித்து பேசினோம். நாம் அவர்களை சந்திக்க சென்ற போது, நாடிராவ் - காமாட்சி தம்பதியினர் குதிரையாட்டத்திற்காக ஒப்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது - மைத்திரிபால சிறிசேன
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திம்புலாகலை - வெஹெரகல பகுதியில் இன்று இடம்பெற்ற சர்வதேச வனப் பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படாவிட்டால், சுமார் 15 வருடங்களில் இலங்கையின் வன வளம் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிக விமான நிலையங்களை கட்டியுள்ளதா பாஜக
ஏப்ரல் 11ஆம் தேதி இந்திய மக்களவை தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா என்பதை பிபிசி ரியாலிட்டி செக் தொடர் ஆய்வு செய்து வருகிறது.
கூற்று: 2014ல் 65 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அது 102ஆக உயர்ந்திருப்பதாக ஆளும் பாஜக கூறுகிறது.
மேலும், 2017ஆம் ஆண்டில், 10 கோடி பயணிகள் உள்ளூர் விமானங்களில் பயணித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் முதல் முறையாக, ரயிலின் குளிர்சாதண பெட்டிகளில் பயணித்த நபர்களைவிட, விமானங்களில் அதிகம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீர்ப்பு: அரசாங்கம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையத்தின் தரவுகள்படி, 2014லிருந்து விமான நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. ஆனால், சரியான எண்ணிக்கையில் மாற்றம் இருக்கிறது. விமான பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்று கூறுவது உண்மைதான்.
மூத்த பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே பி நட்டா, வியாழக்கிழமை மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். மொத்தம் 184 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்?
"உழைக்கிறோம்; ஆனால் வாழ்வில் உயரவில்லை" - மீனவப் பெண்களின் வாழ்க்கைப்பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்