இரண்டு நாள் பயணமாக கிம் ஜாங்-உன் சீனா வருகை

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்புடனான உச்சி மாநாட்டை அடுத்து, வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இரண்டு நாள் பயணமாக சீனாவிற்கு சென்றுள்ளார். கடந்த மார்ச் மாதத்திலிருந்து சீனாவிற்கு அவர் மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது வட கொரியா மீதான தடைகள் மற்றும் கடந்த வாரம் டிரம்புடன் நடைபெற்ற உச்சிமாநாட்டில் தான் அளித்த வாக்குறுதிகள் குறித்து கிம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கொரியாவின் ஒரே பொருளாதார கூட்டாளியாக விளங்கும் சீனா, ஏற்கனவே வட கொரியா மீதான தடைகளை தளர்த்துவதற்கு பரிந்துரை செய்திருந்தது.

இதற்கிடையில், அமெரிக்காவும் தென் கொரியாவும் தங்களின் அடுத்த கூட்டு ராணுவ பயிற்சிக்கான திட்டங்களை நிறுத்திவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.

சிங்கப்பூர் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கிம்மின் இந்த சுற்றுப்பயணம் குறித்து வழக்கத்திற்கு மாறாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தாலும், இதுகுறித்த மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :