உலகப் பார்வை: டிரம்பின் மகள், மருமகனின் வருமானம் எவ்வளவு?

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

டிரம்ப் மகள், மருமகனின் வருமானம் எவ்வளவு?

அமெரிக்க அதிபர் டிரம்பின் சம்பளமில்லா மூத்த ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட முதல் ஆண்டில், டிரம்பின் மகள் இவான்கா டிரம்பும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னெரும் குறைந்தது 82 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக அமெரிக்க ஊடகங்களால் மேற்கொள் காட்டப்பட்ட ஆவணங்கள் கூறுகின்றன.

டிரம்பின் மகளும் மருமகனும் தொடர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

ஜஸ்டின் ட்ரூடோவிடம் மன்னிப்பு கேட்ட டிரம்பின் ஆலோசகர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான கருத்துகளை கூறிய அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டே நவரோ, தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக நடந்துகொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, ''நரகத்தில் சிறப்பு இடம்'' இருக்கும் என நவரோ கூறியிருந்தார்.

முன்னதாக, எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ளதால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த மாதம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிறகு நவரோ இக்கருத்தைக் கூறியிருந்தார்.

நவரோவின் வருத்தத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இத்தாலியை விமர்சித்த பிரான்ஸ் அதிபர்

மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு மீட்பு கப்பலில் உள்ள 600க்கும் அதிகமான அகதிகளை ஏற்றுக்கொள்ள இத்தாலி நாட்டு அரசு மறுக்கும் நிலையில், இத்தாலி வெறுப்பு மற்றும் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொள்வதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மாக்ரோன் விமர்சித்துள்ளார்.

குடியேறிகள் பிரச்சனை வரும்போது எல்லாம் திரும்பிக்கொள்ளும் நாடுகளிடம் இருந்து பாசாங்கு பாடங்களை இத்தாலி ஏற்றுக்கொள்ளாது என இத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே கூறியுள்ளார்.

இராக்: புதிய ஆட்சி அமைக்கும் எதிரெதிர் துருவங்கள்

இராக்கில் கடந்த மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிகளவு வாக்குகளை பெற்ற இரண்டு கட்சிகள் நாட்டின் மிகப்பெரிய அரசியல் கூட்டணியை அமைக்க உள்ளன. தேசியவாதியும், அமெரிக்காவின் நீண்ட கால எதிரியுமான மோக்டடா சதர் கட்சியும், இரான் ஆதரவு கொண்ட ராணுவ தலைவர் ஹதி அல்-அமிரி கட்சியும் இணைந்து புதிய அரசை அமைக்க உள்ளன. இரண்டு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக முன்பு இருந்தன

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :