You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணாமல் போன துபாய் இளவரசி எங்கே? தகவல் வெளியிட வலியுறுத்தல்
காணாமல் போன துபாய் இளவரசி எங்கே என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகளை ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
எமிரேட்ஸ் ஆட்சியாளர் ஷேக் மொஹமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகளான ஷேய்கா லத்தீஃபா, சுதந்திரமான வாழ்க்கை வாழ வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், லத்தீஃபா பயணம் செய்த ஆடம்பரப் படகு இந்தியா அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் மீண்டும் துபாய் திருப்பி அனுப்பப்பட்டதாக நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். அப்போதில் இருந்தே அவரைக் காணவில்லை.
சட்டரீதியான காரணங்களால், இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று துபாய் அதிகாரிகள் கூறினர்.
வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது லத்தீஃபா பிடிப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாட்டின் உளவாளி ஒருவர் மற்றும் ஃபின்லாந்தின் தற்காப்புக் கலை பயிற்றுநர் ஒருவரின் உதவி லத்தீஃபாவுக்கு கிடைத்துள்ளதாக பிபிசி நியூஸ் நைட் புலனாய்வு கூறுகிறது.
துபாய் அதிகாரிகள் அவரின் இருப்பிடத்தை வெளிப்படுத்தி, அவரது சட்ட அந்தஸ்தை தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
"அவர் எங்கு உள்ளார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர் நிர்ப்பந்தத்தின்பேரில் காணாமல் போயிருப்பதாகவே ஆகும்" என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
"தன் குடும்பத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்து செல்ல விரும்புவதாக லத்தீஃபா, தமது தோழிகளிடம் கூறியுள்ளார். அவர் காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆவதால், அவர் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது."
கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று இந்தியாவின் கடற்கரையில் இருந்து 80 கிலோ மீட்டருக்குள் லாட்டீஃபா இடைமறிக்கப்பட்டார் என்று பிரிட்டனில் இருந்து செயல்படும் ''டீடெயின்ட் இன் துபாய்' என்ற அமைப்பு கூறியுள்ளது.
அவர் காணாமல் போனது குறித்து வெவ்வேறு விஷயங்களை சொல்லும் அனைவரும் ஏற்கனவே குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்று பிபிசியிடம் பேசிய துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்