You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காமன்வெல்த் அமைப்பின் தலைவராகிறார் இளவரசர் சார்லஸ்
வேல்ஸ் இளவரசரான சார்லஸ் காமன்வெல்த் அமைப்பின் அடுத்த தலைவராவார் என்று அதன் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, தனக்கு அடுத்ததாக காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இளவரசர் சார்லஸ் 'எப்போதாவது ஒரு நாள்' நியமிக்கப்படுவது தனது "மனமார்ந்த விருப்பம்" என்று பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத் தெரிவித்திருந்தார்.
காமன்வெல்த் அமைப்பின் தலைவர்கள் இதுகுறித்து வின்ட்சர் கோட்டையில் மூடிய அறையில் கலந்துரையாடி வருகின்றனர்.
பரம்பரிய முறையில் அல்லாத இந்தப் பதவி இளவரசர் சார்லசுக்கு தாமாகவந்து சேராது. இந்த அமைப்பின் 53 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இதன் தலைமைப் பொறுப்புக்கு சுழற்சிமுறையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையும் சிலரால் தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் முன்னதாக இளவரசர் சார்லஸ் தலைமைப் பதவிக்கு வருவதற்கு ஆதரவு கொடுத்திருந்தனர்.
இந்த செய்தி அரசிக்கு பெரும் திருப்தியைத் தருவதாக இருக்கும் என்று பிபிசியின் அரச குடும்ப செய்தியாளரான டயமான்ட் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் நாடுகள் இடையேயான கடல் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த இரண்டு நாள் காமன்வெல்த் உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிற பிற விஷயங்கள்.
பிற செய்திகள்:
- இந்தியாவில் மீண்டும் ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு வந்துவிட்டதா?
- நிர்மலா தேவி விவகாரம்: சிபிசிஐடி தலைவர் மாற்றப்பட்டது ஏன்?
- காமன்வெல்த் உச்சிமாநாட்டில் மோதி : இந்தியாவுக்கு என்ன கொண்டு வருவார்?
- தனக்குப் புனிதர் தோற்றம் ஏற்படுத்த காமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்துகிறாரா மோதி?
- #தமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்