உலகப் பார்வை: புதிய கிரகங்களை தேடும் முயற்சியில் நாசா

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்

புதிய கிரகங்களை தேடும் முயற்சியில் நாசா

சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள புதிய உலகங்களை தேடும் நோக்கத்துடன் அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, புதிய விண்வெளி தொலைநோக்கி ஒன்றினை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. ப்ளோரிடாவின் கேப் கேனவிரல்ஸில் உள்ள விண்வெளி நிலையத்தில் இருந்து TESS என்று அழைக்கப்படும் செயற்கைக்கோளை ஏந்தி X ஃபேல்கான் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

வாழ்வதற்கு ஏதுவாக பூமி போன்ற அமைப்பு இருப்பதாக நம்பம்படும், அருகில் இருக்கும் உலகங்களை தேடுவதில் இந்த செயற்கைக்கோள் கவனம் செலுத்தும்.

மின்சார இருட்டடிப்பால் பியார்ட்டோ ரீக்கோ தீவில் பாதிப்பு

கடந்த செப்டம்பர் மாதத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய மரியா புயலால் சேதமடைந்த ஒரு மிகப்பெரிய மின்சார பைலானை அகற்றும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டதால், மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பியார்ட்டோரீக்கோ தீவில் பல மில்லியன் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த 2 வாரங்களில் இவ்வாறான மின்சார துண்டிப்பு நிகழ்வது இது இரண்டாவது முறை என்று தெரிவித்த மாகாண ஆளுநர், இது தொடர்பான பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் பணிநீக்கம் செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

வெளிநடப்பு செய்வேன் - டிரம்ப்

அணுசக்தி பயன்பாட்டை வட கொரியா முழுமையாக நீக்க ஒப்புக்கொள்ளும் வரை அந்நாட்டிற்கு கொடுக்கப்படும் அழுத்தம் பராமரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வட கொரியா அதிபர் கிம் ஜாங்-உன்னை சந்திப்பது வெற்றிகரமாக அமையும் என்று நம்புவதாக தெரிவித்த டிரம்ப், அப்படி இல்லையென்றால் மரியாதையாக நான் வெளிநடப்பு செய்து விடுவேன் என்று கூறினார்.

10,000 செவிலியர்கள் பணி நீக்கம்

திங்கட்கிழமையன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 10,000க்கும் மேற்பட்ட செவிலியர்களை ஜிம்பாப்வே அரசு பணிநீக்கம் செய்துள்ளது. ஊதிய உயர்வு அளித்தும் பணிக்கு திரும்ப செவிலியர்கள் மறுத்ததாக துணை அதிபர் கான்ஸ்டன்டினோ சிவேங்கா கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: