You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்கிற்கு இறுதி சடங்கு
புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
`மோட்டார் நியூரான் நோய்` என்னும் உடல் இயக்கத்தை பாதிக்கும் அரிய நரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 76 வயதான பிரபல இயற்பியலாளரான ஸ்டீஃபன் ஹாக்கிங் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரத்திலுள்ள தனது வீட்டில் உயிரிழந்தார்.
ஹாக்கிங்கின் மூத்த மகன் ராபர்ட், முன்னாள் மாணவரான பே டூக்கர் மற்றும் வானியலாளர் மார்ட்டின் ரீஸ் ஆகியோர் இறுதி அஞ்சலி நிகழ்ந்தவின்போது உரையாற்றினார்கள்.
ஹாக்கிங்கின் உடல் தேவாலயத்தை அடைந்தவுடன், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு ஆண்டையும் குறிக்கும் வகையில் 76 முறை மணி ஒலிக்கப்பட்டது.
ஹாக்கிங்கின் மூன்று குழந்தைகளான லூசி, ராபர்ட் மற்றும் டிம் ஆகியோருடன் அவரது நெருங்கிய குடும்பதினரும் அவரது சவப்பெட்டியைச் சுமந்து சென்றனர்.
சவப்பெட்டி மேல்நோக்கி தூக்கப்பட்டதும், அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கரவொலி எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.
பிரபஞ்சத்தை குறிக்கும் அல்லி மலர்கள் மற்றும் துருவ நட்சத்திரத்தை குறிக்கும் வெள்ளைநிற ரோஜாக்கள் ஹாக்கிங்கின் சவப்பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்தன.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் உடலை அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சியாளராக இருந்த கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியிலிருந்து தேவாலயத்திற்கு ஆறு சுமை தூக்குபவர்களால் எடுத்துச்செல்லப்பட்டது.
ஹாக்கிங் இந்த கல்லூரிக்கு இரவு விருந்துக்காக வரும்போது அவருக்கு உதவி செய்யும் சுமை தூக்குபவர்கள், ஹாக்கிங்கின் உடலை அவரது குடும்பத்தினருடன் சுமந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியிலுள்ள அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாக்கிங்கின் சாம்பல் ஜூன் மாதத்தில் அடக்கம் செய்யப்படும்.
ஹாக்கிங் இறந்த அன்று காலையில் திறக்கப்பட்ட இரங்கல் தெரிவிப்பு புத்தகம், பொதுமக்களுக்காக இனி திறக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்