You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் பார்வை: “பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன்”
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
விமானத்தைசுட்டு வீழ்த்த உத்தரவு
பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்த தான் உத்தரவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறி உள்ளார். அந்நாட்டில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் பேசி உள்ள அவர், 2014 ஆம் ஆண்டு உக்ரைனிலிருந்து துருக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டதாகவும், அந்த விமானத்தைக் கொண்டு குளிர்கால ஒலிம்பிக் தொடரை தாக்குவதற்காக கடத்தல்காரர்கள் திட்டுமிட்டு இருப்பதாகவும் தகவல் வந்தது. இத்தாக்குதலை தடுக்க அவ்விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன். ஆனால், அத்தகவல் பொய்யான ஒன்று தெரிந்தது. அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றுள்ளார்.
விமான விபத்து
சிறிய ரக தனியார் விமானம் ஒன்று இரான் வான் எல்லையில் விபத்துக்கு உள்ளானதில், பிரபல துருக்கிய தொழிலதிபரின் மகள் உட்பட 11 பேர் மரணித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என துர்கிஷ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்துக்கு உள்ளான அந்த விமானத்தில் 11 பேர் இருந்ததாகவும், அதில் மூன்று பேர் விமான ஊழியர்கள் என்றும், 8 பேர் பயணிகள் என்றும் துருக்கிய அதிகாரிகள் கூறினர். மேற்கு இரான் வான் பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பிரபல தொழிலதிபர் ஹூசைன் பஸாரனின் மகள் மினா பஸாரனுக்கு அடுத்த வாரம் திருமணம். இதற்காக தன் தோழிகளுக்கு துபாயில் விருந்து வைத்தார். இவ்விருந்து முடித்து அனைவரும் திரும்பும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நியூயார்க்கில் உள்ள கிழக்கு நதியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். மத்திய விமான போக்குவரத்து ஆணையம், இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு நடந்ததாக கூறியுள்ளது. விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டரில் ஆறு பேர் வரை பயணிக்கலாம். விபத்துகுள்ளான போது, அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று தெரியவில்லை. நீர்மூழ்கி நீச்சல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
சிரியவுக்கு அமெரிக்கா கண்டனம்
விஷ வாயுவை பயன்படுத்துவது மிகவும் விவேகமற்ற செயலாக இருக்கும் என்று அமெரிக்கா பாதுகாப்புத்துறை செயலாளர் ஜிம் மாட்டிஸ் சிரியாவை கண்டித்து உள்ளார். கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சிப்படைக்கும், சிரியா அரசுக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களில் அந்தப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. செயற்பாட்டாளர்களும், மீட்பு பணியாளர்களும், சிரியா அரசு கிழக்கு கூட்டாவில் க்ளோரின் வாயுவை பயன்படுத்தி இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், சிரியா அரசாங்கம் இதனை மறுத்து வருகிறது. இப்படியான சூழலில் ஜிம் இவ்வாறாக கூறி உள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்