You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"வெறும் குற்றச்சாட்டுகளால் பிறரின் வாழ்க்கை அழிக்கப்பட்டு வருகின்றன" - டிரம்ப்
"வெறும் குற்றச்சாட்டுகளால் பிறரின் வாழ்க்கை அழிக்கப்பட்டு வருகின்றன" என்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளின் மத்தியில், வெள்ளை மாளிகையின் இரண்டு உதவியாளர்கள் பதவி விலகியதை அடுத்து, அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
"யாராவது பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டால் அதிலிருந்து மீள முடியாத நிலைதான் உள்ளது" என்று டிரம்ப் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
உரை எழுத்தாளர் டேவிட் சோரென்சன் மற்றும் ஊழியர் செயலர் ராப் போர்டர் என இருவர் வெள்ளை மாளிகையை விட்டு கடந்த ஒரு வாரத்திற்குள் வெளியேறியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்களை கையாள்வது தொடர்பாக வெள்ளை மாளிகை வெகுவாக விமர்சிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் விரைவாக ஏளனத்திற்குள்ளாயின.
பாலியல் தொல்லை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உலக அளவில் நடைபெற்று வரும் நிலையில் டிரம்பின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய இரண்டு பேரில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
ஆனால், குற்றச்சாட்டுக்கள் ஒருவருடைய வாழ்க்கையையும், தொழிலிலும் பாதிப்புக்களை கொண்டு வரலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு
பாலியல் வன்முறையாலும், தொல்லைகளாலும் பெண்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டு வருகிறது என்று ஜனநாயக கட்சியின் சென்ட் அவை உறுப்பினர் பாட்றி மர்ரி கோபமாக பதிலளித்துள்ளார்.
அதிபர் ஆதரவு அளிக்காவிட்டாலும், நான் அவர்களை நம்பி, ஆதரவு அளிக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஜக்கி ஸ்பைசர் அதிபர் டிரம்பின் கூற்றுக்கள் மிக கடுமையாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்
- திருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா? #HerChoice
- குத்துச்சண்டை காதலி துளசி ஹெலன்: விளையாட்டில் பெண்களை ஊக்குவிக்க புல்லட் பயணம்
- சினிமா விமர்சனம்: கலகலப்பு - 2
- பிபிசி தமிழில் உங்கள் காதல் புகைப்படங்கள் இடம்பெற வேண்டுமா?
- “முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவது அவசியம் இல்லை”
- 'பேசும் கண்கள்‘ - பிபிசி தமிழ் நேயர்களின் 'கண்கள்' புகைப்படங்கள்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்