அலபாமா செனட் தேர்தல்: பாலியல் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப் வேட்பாளர் தோல்வி

அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ராய் மூரேவுக்கு எதிராகக் கடுமையான பிரசாரம் நடந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றுள்ளார். 25 ஆண்டுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இங்கு வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.

மூரேவுக்கு அதிபர் டிரம்ப் ஆதரவளித்த நிலையில் டக் ஜோன்ஸ் எதிர்பாராத வெற்றி, டிரம்பிற்கு விழுந்த அடியாகப் பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு 99% ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில், இதனை மூரே ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.

ராய் மூர் தாம் 14 வயதாக இருக்கும்போது தம்மை மயக்கி பாலியல் ரீதியாக தம்மிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். மூர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவந்தார்.

அலபாமா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த மூருக்கு தற்போது வயது 70.

கிறிஸ்துவப் பழமைவாதியான இவர், ஓரினச்சேர்க்கை நடவடிக்கை சட்டவிரோதமாக இருக்க வேண்டும் என கருதுவதாக கூறியவர்.

இவருக்கு எதிராக அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே அணி திரண்டனர். இவர் தேர்ந்தெடுக்கப்படுவதை அவரது சொந்தக் கட்சியினரே விரும்பவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :