You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
விடுதலையான இளவரசர்
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக செளதி அரேபியாவில் 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய இளவரசரான மிதெப் பின் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு தொகையை கொடுக்கும் உடன்பாட்டுக்கு அவர் ஒப்புக்கொண்டதால் விடுவிக்கப்பட்டதாக செளதி அதிகாரிகள் கூறுகின்றனர்.
உலகளாவிய அச்சுறுத்தல்
வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ள நிலையில், இந்தச் செயல் உலகளாவிய அச்சுறுத்தலை விடுத்துள்ளது என அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகளை மறுக்கும் சந்தேக நபர்
நியூயார்க் மான்ஹாட்டன் நகரில் சைக்கிளில் சென்றவர்கள் மீது டிரக்கை மோதி 8 பேரைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட சய்ஃபுல்லோ சாய்போவ், கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் தான் ஒரு குற்றவாளி இல்லை என கூறியுள்ளார்.
ஒருபாலின உறவுக்காரர்களுக்குச் சிறை தண்டனை
எகிப்தில் ஒருபாலின உறவுக்காரர்களுக்கு எதிராகக் கடந்த எகிப்து அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 16 பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்