You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.நா நீதிமன்றம்: இந்தியாவிடம் தோற்ற பிரிட்டன்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான சட்டப் பிரிவு. நெதர்லாந்து நாட்டின் தி ஹேக்-இல் அமைந்துள்ள இதன் முக்கிய பணி நாடுகளுக்கு இடையெ உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான்.
அதன் பணிகள் பெரும்பாலும் சட்ட நிபுணத்துவம் சார்ந்த்து என்பதால், அவை முக்கியச் செய்திகளில் இடம் பிடிப்பதில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமைக்கப்பட்ட அந்த நீதிமன்றத்தில், இருக்கும் 15 நீதிபதிகளில் ஒரு பிரிட்டிஷ் நீதிபதி இருந்து வந்தார். ஆனால், தற்போது அந்த இடத்தை பிரிட்டன் இழந்துள்ளது.
மொத்தமுள்ள 15 நீதிபதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐந்து நீதிபதிகள் தெரிவு செய்யப்படுவர். பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞரும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ்-இன் முன்னாள் பேராசிரியருமான சர் கிறிஸ்டோ கிரீன்வுட் இன்னொரு ஒன்பது ஆண்டு காலம் தேர்வு செய்யபடலாம் என்று நம்பினார்.
அதில் ஒரு சிக்கல் உண்டானது. ஐ.நாவுக்கான லெபனான் நாட்டின் முன்னாள் தூதர் களத்தில் இறங்கினார்.
இதனால் ஐந்து நீதிபதிகள் பதவிகளுக்கு 6 வேட்பாளர்கள் போட்டியிடும் சூழல் உருவானது
ஐக்கிய நாடுகள் அவையில் பல ஆண்டுகள் பணியாற்றியதால் அவரால் எளிதாக வெற்றி பெற முடிந்தது.
ஆசிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இதன் காரணமாக இந்திய வேட்பாளரான தல்வீர் பண்டாரி ஐரோப்பிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் போட்டியிடவேண்டிய சூழல் உருவானது.
சமீப நாட்களில் நான்கு பதவிகளுக்கு உரிய நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டனர். பிரிட்டன் வேட்பாளர் ஐ.நா பாதுகாப்பு சபையின் ஆதரவையும், இந்திய வேட்பாளர் ஐ.நா பொதுச் சபையின் ஆதரவையும் பெற்று இருந்தனர். ஒரு வேட்பாளர் நீதிபதி பதவிக்கு வெற்றி பெற இந்த இரு அமைப்புகளின் ஆதரவும் தேவை.
வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டது. வெற்றிக்காக மோசமான வழிமுறைகளை பிரிட்டன் கையாள்வதாக இந்திய ஊடகங்கள் குற்றம் சாட்டின. பிரிட்டனின் நடவடிக்கை முன்னாள் வைஸ்ராய் ராபர்ட் கிளைவ்-இன் செயல்களுடன் ஒப்பிடப்பட்டது. காலனியாதிக்கத்துக்கு எதிரான உவமைகளில் சில மட்டுமே பிரிட்டனை விமர்சிக்க பயன்படுத்தப்படாமல் இருந்தன.
ஆனால், பிரிட்டன் அமைச்சர்கள் வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டனர். இரு தரப்பும் "கூட்டு சந்திப்புகள்" நடத்தி பேச்சுவார்த்தை மூலம் இணக்கமான சூழலை உருவாக்கும் ஐ.நாவின் ஒரு சரத்தை அவர்கள் பயன்படுத்த முயன்றனர்.
ஆனால், பாதுகாப்பு சபையில் போதிய ஆதரவு கிடைக்காமல் போகலாம் எனக்கருதியும், போட்டி அதிகமானால் இந்தியா மற்றும் பிரிட்டன் உடனான வர்த்தக உறவுகள் பாதிக்கப்படும் என்றும் அம்முயற்சியைக் கைவிட்டனர்.
எனவே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சர் கிறிஸ்டோபர் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தபின்னர், 1946க்கு பிறகு முதல் முறையாக பிரிட்டன் நீதிபதி யாரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இல்லாத நிலை உருவாகும்.
ஐ.நா பாதுகாப்பு சபையின் அதிகாரக் குவியல் சமநிலையாவதை இது பிரதிபலிக்கிறது. அதன் ஆதரவு பெற்ற பிரிட்டன் வேட்பாளரால் வெல்ல முடியவில்லை. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள ஐந்து நாடுகள் உள்ளிட்ட நாடுகளின் அதிகாரத்தை ஐ.நா பொது சபையின் உறுப்பு நாடுகள் மாற்றி வருகின்றன.
மேற்கொண்டு தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தி வரும், பெரும்பாலும் வளரும் நாடுகளை அங்கமாகக் கொண்ட ஜி-77 நாடுகளுக்கு இது ஒரு வெற்றியாக கருதப்படும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரிட்டன் தனது இடத்தை இழந்திருப்பது ஒன்றும் முன்னுதாரணம் இல்லாத நிகழ்வு அல்ல. கடந்த ஆண்டு சர்வதேச சட்ட ஆணையத்தில் உறுப்பினர் பதவியை பிரான்ஸ் வேட்பாளாரால் அடைய முடியவில்லை. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து ரஷ்யாவும் வெளியேறியது.
ஆனால், இந்த நிகழ்வு பிரிட்டனின் ராஜீய ரீதியான தோல்வியையும் பிரதிபலிக்கிறது. பிரிட்டன் பிரதமர் தெரீசா மே இந்த ராஜதந்திர முயற்சியில் நேரடியாக ஈடுபட்டாரா என்பதை பிரிட்டன் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. ஆனால், மூத்த அதிகாரிகள் பிரிட்டன் நீதிபதிக்கு ஆதரவு திரட்டும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் பொதுச் சபையின் ஆதரவைப் பெற முடியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்