You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பாலுறவில் தடைகளை தகர்த்தெறிய இளம் வயதினர் ஆர்வம்'- ஆய்வு தகவல்
பிரிட்டனில் உள்ள இளம் வயதினர் எதிர் பாலின துணைகளுடன் ஆசனவாய் வழி பாலுறவு உள்பட பலவகையாக பாலுறவு வழிகளில் ஈடுபடுவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
பிரிட்டனில் 1990களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் தேசிய பாலுறவு கருத்துக்கணிப்பின் முடிவுகளை ஆராய்ந்ததில், வல்லுநர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டீன் வயதை எட்டிய 10ல் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்குள்ளாக ஆசனவாய் வழி பாலுறவை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதே பருவ வயதினர் 22லிருந்து 24 வயதை எட்டுவதற்குள், 10ல் மூன்று பேர் ஆசனவாய் வழி பாலுறவை முயற்சித்துள்ளதாக கூறியுள்ளனர்.
எனினும், இளம் வயது ஆண் மற்றும் பெண் இடையே இன்னும் பெண்ணுறுப்பு மற்றும் வாய்வழி மூலம் பாலுறவு கொள்வதென்பது பொதுவான வழிகளாக இருக்கிறது.
பெண்ணுப்பு, ஆசனவாய் வழியாகவோ அல்லது வாய்வழியாகவோ பாலுறவு கொள்ள ஆரம்பிக்கும் இளைஞர்களின் வயது என்பது கடந்த சில தசாப்தங்களில் மாறவில்லை.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், அவ்வாறு பாலுறவு கொள்ள ஆரம்பிக்கும் இளைஞர்களின் வயது 16 ஆக உள்ளது.
ஆனால், அடோலெஸ்சென்ட் ஹெல்த் என்ற சஞ்சிகையில் வெளியான ஆய்வில், மக்கள் என்ன வகையான பாலுறவை கொள்கிறார்கள் என்பதை பற்றி கூறுகிறது. ஆனால், அவர்களுடைய விருப்பமான வழிகள் ஏன் மாறிக் கொண்டே இருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் இல்லை.
பாலுறவு சோதனைகள் குறித்து நிபுணர்களால் ஊகிக்க மட்டுமே முடியும். ஆனால், சமூகம் அதுகுறித்து இன்னும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும், குறைந்து குற்றம் காண்கிற மனோபாவத்தையும் கொண்டுள்ளது.
தடைகளை தகர்தெறிவது
லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் டிராபிக்கல் மெடிசின் என்ற கல்லூரியின் பாலுறவு மற்றும் இனபெருக்க ஆரோக்கிய பேராசிரியரும், இந்த ஆய்வின் மூத்த ஆசிரியருமான கே வெல்லிங்ஸ், ''தற்போது இளம் வயதினரின் விரிவடைந்து வரும் பாலியல் அனுபவங்களை வைத்து பார்க்கும்போது, அவர்கள் பாலுறவு கொள்ளும் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சீரானவையாக தோன்றுகின்றன.'' என்று கூறுகிறார்.
சவுத்ஹாம்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பாலுறவு மற்றும் இனபெருக்க ஆரோக்கிய பேராசிரியரான சின்தியா கிரஹாம், பாலுறவில் தடைசெய்யப்பட்டவையாக கருதப்படும் முறைகளை உடைந்தெறிவதில் இணையமும், ஊடகமும் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
''முன்பு இணையம் என்பதே இல்லாமல் இருந்தது. தற்போது இணையத்தில் மக்களால் சுலபமாக கண்டுபிடித்து தேட முடிகிறது'' என்கிறார் அவர்.
''ஆசனவாய் வழி பாலுறவு இன்னும் கண்டிக்கக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், மக்களின் அணுகுமுறை மாறிக் கொண்டே இருக்கிறது.'' என்கிறார் சின்தியா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்