ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ஜிம்பாப்வேவில் ராணுவ புரட்சி?

ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Reuters

ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவருவதற்கு மத்தியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், தேசிய ஒளிபரப்பு நிறுவனமான இசட்.பி.சி.யை கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் நடந்துள்ளது. ஆனால், இதற்கான காரணம் இன்னும் தெளியவில்லை.

Presentational grey line

அமெரிக்காவில் துப்பாக்கி சுடு 4 பேர் பலி

அமெரிக்கா

பட மூலாதாரம், GOOGLE MAPS

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில், ஒரு துப்பாக்கிதாரி பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த துப்பாக்கிதாரியை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

Presentational grey line

ஆஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமணத்திற்கு ஆதரவு

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

ஒரே பாலின திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், இதற்கு ஆதரவாக ஆஸ்திரேலியர்கள் வாக்களித்தனர்.

ஓர் பாலின உறவுக்காரர்கள் திருமணம் செய்துகொள்ள ஆதரவாக 61.6% பேர் வாக்களித்துள்ளனர். இந்த பெரும் ஆதரவு காரணமாக கிறிஸ்துமசுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் சட்டத்தை மாற்றுவது தமது அரசின் நோக்கமாக இருக்கும் என அந்நாட்டுப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.

Presentational grey line

டிரம்பின் அணு ஆயுத அதிகாரம் குறித்து பரிசீலனை

டிரம்பின் அணு ஆயுத அதிகாரம்

பட மூலாதாரம், Getty Images

அணு ஆயுத தாக்குதல் நடத்துவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகாரம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் பரிசீலனை செய்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக, அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவது தொடர்பான அமெரிக்க அதிபரின் அதிகாரம் குறித்து காங்கிரஸ் பரிசீலனை செய்துள்ளது.

டிரம்ப் பொறுப்பற்றவிதமாக அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என சில செனடர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வளர்ந்து வரும் வார்த்தைப் போரின் ஒரு கட்டத்தில் "உலகம் முன்னெப்போதும் பார்த்திராத வகையில் உக்கிரமான போரை அமெரிக்கா கட்டவிழ்க்கும்" என்று எச்சரித்திருந்தார் டிரம்ப்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :