ஜப்பான் தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபே மீண்டும் வெல்வார்: வாக்குச்சாவடி கணிப்பு

பட மூலாதாரம், Reuters
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் ஆளும் கூட்டணி, ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜப்பான் பொது தேர்தலில் பெரிய வெற்றியை பெரும் என வாக்குச்சாவடி கணிப்பு (எக்சிட் போல்) கூறுகிறது.
ஷின்சோ அபேயின் எல்.டி.பி கூட்டணி 311 இடங்களை கைப்பற்றி, அதன் மூன்றில் இரண்டு 'பெரும் பெரும்பான்மையை' தக்கவைக்கும் என ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.
இக்கூட்டணி மூன்றில் இரண்டு இடங்களை விட சற்று குறைவாக இடங்களை பெரும் என மற்றொரு கணிப்பு கூறுகிறது.
ஷின்சோ அபேயின் லட்சியமான ஜப்பான் போருக்கு பிந்தைய சமாதான அரசியலமைப்பைத் திருத்தியமைக்க, பெரும்பான்மை இடங்களை பெறுவது மிக முக்கியமானது.
தேர்தலில் வெற்றி என்பது அபே மூன்றாவது முறையாக லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டியின் தலைவர் ஆவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
2012 முதல் பிரதமாக உள்ள அபே, இத்தேர்தலில் வெற்றி பெற்றால் ஜப்பானின் அதிக கால பிரதமராக இருந்தவர் என்ற இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
அபேவின் கட்சிக்கு வாக்களிப்பது குறித்து ஒரு பார்வையாளர் பிபிசியிடம் கூறுகையில்,"வேறு மாற்றே இல்லை" என்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












