You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்களை பாதுகாப்பாக உணரச் செய்யும் ஆணா நீங்கள்?
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி
முதலில், எனது ஆண் வாசகர்களுக்கு ஒரு குறிப்பு. இது நான் உங்களுக்கு சொல்லக்கூடிய விஷயம் அல்ல. இவை, ஆண்களே ஆண்களுக்காக கொண்டுவரப்பட்டவை. ஆதனால், இதை கண்டு அசௌகர்யப்பட துவங்கும் போது, இதை நிராகரிகாமல், கடைசிவரை படிக்க முயலுங்கள்.
நீங்கள் எப்போதாவது ஒரு பெண்ணின் உள்ளாடையை கல்லூரி காலங்களில் இழுத்து, அதை நகைச்சுவையான செயல் என்று எண்ணியிருக்கிறீர்கள்?
நீங்கள் எப்போதாவது, ஒரு பெண்ணிடம் வழிந்து பேசி, அவர் மறுப்பு தெரிவித்தும் கூட, அவரை வெளியே செல்ல அழைத்து இருக்கிறீர்களா?
`வெட்கமே இல்லாமல் வழிபவர்` என்பதை நீங்கள் பெருமைக்குறிய ஒன்றாக எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
ஒரு பெண் அவளுக்கு தேவையில்லை என நினைக்கும் போதோ அல்லது, அவர் அசௌகர்யமாக உணரும் நேரத்தில், அது தெரிந்தும் நீங்கள் அவரை தொட்டுள்ளீர்களா?
ஷரிக் ரஃபீக் அவ்வாறு செய்ததோடு, தன்னை முழுமையான முட்டாள் என அவர் நினைக்கிறார்.
நான், #மீடூ பதிவுகளை பார்த்துகொண்டு இருந்த போது ஆண்களின் பதிவுகளுக்கிடையே அவரின் பதிவை கண்டுபிடித்தேன்.
#மீடூ பதிவுகள், ஹாலிவுட் நடிகர் ஹார்வி மீதான பாலியல் புகார்களை நடிகைகள் வைக்க துவங்கியது முதல், பெண்கள் அவர்களின் பாலியல் தாக்குதல்கள் குறித்து எழுத்த துவங்கினர்.
ஆனால், எனக்கு பெண்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை அறிய விருப்பமில்லை. உண்மையில் சொல்லவேண்டுமென்றால், நான் சோர்வடைந்து, வெறுத்து, கோபத்தில் உள்ளேன்.
மீண்டும் ஒரு ஆஷ்டாக், மீண்டும் பெண்களுக்கு பேசுவதற்கான அழைப்பு.
நாங்களும் சில காலமாக பேசிவருகிறோம். ஆனால் அது காதுகேளாதவர்களின் காதில் போய் விழுவது போலவே உள்ளது.
அதனால், நான் ஆண்களின் பதிவில் விருப்பம் கொண்டுள்ளேன். பெண்கள் தாங்கள் தொந்தரவு செய்யப்பட்டோம் என்பதை வெளிப்படையாக கூற முன்வர துணிவுள்ளது என்றால், ஆண்களுக்கு நாங்கள் தொந்தரவு செய்தோம் என்று கூறும் துணிவுள்ளதா?
அவர்கள் செய்த சில செயல்கள், தொந்தரவுகள் என்பதை புரிந்துகொள்வார்களா? அவர்களும் கெட்டவர்களாக இருந்தார்கள் என்பதை புரிந்துகொள்வார்களா?
அல்லது, கெட்டவர்கள், கெட்ட செயலை செய்யும் போது, தங்களின் கண்களை மூடிக்கொள்வார்களா?
தன்னுடைய ஏற்றுக்கொள்ள முடியாத செயல்பாடுகளை, பெண்கள் கூறுவதை கவனிக்காததை, பெண்களை தொந்தரவு செய்வது சரிதான் என என்னும் கலாசாரத்தினால் இயக்கப்பட்டதை ஷரிக் ரஃபீக் மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை.
உமர் ஷேக், தனது அலுவலகத்தில் நடந்த இத்தகைய தொந்தரவுகளை பார்த்தும் பார்க்காதது போல விலகி சென்றது, தனக்கு அவமானமாக உள்ளதாக கூறியுள்ளார்.
சக பெண் ஊழியர், உமர் இந்த தொந்தரவு குறித்து கேள்வி கேட்காதது ஏமாற்றத்தை அளித்தது என்று கூறிய போது அவருக்கு அவமானமாக இருந்தது.
உமர், அந்த குறிப்பிட்ட ஆண், நட்பு என்ற கோட்டை தாண்டி நடந்ததை அறிந்தும், அவரின் எதிரில் எதுவும் நடக்காததால் அவர் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்.
அந்த ஆண், மில்லியன் டாலர் மதிப்புள்ள பணிகளை நடத்த தேவைப்படுவார் என்பதால் எதுவும் கேட்காமல் இருந்ததை ஒப்புக்கொள்கிறார்.
தொந்தரவு நடக்கிறது என்பதை அறிந்துகொள்வது முதல்கட்டமாக இருக்கையில், அடுத்த போராட்டம் என்பது, அதை குறித்து வாய் திறந்து பேசுவது.
பணம், மரியாதை, வேலை என எப்போதுமே ஏதாவது ஒன்று இருக்கத்தான் செய்யும்.
இதில் எதுவுமே சுலபமானது அல்ல.
மக்கள் ஆண்களை பார்த்து சிரிக்கலாம், பெண்களிடம் கூறுவது போல, விட்டுவிடு என இயல்பாகவும் சொல்லாம். ஏனென்றால், இவை பாதிப்பில்லாத வேடிக்கைகள், அதை ஏன் பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டும்?
ஆனால், ஷரிக் மற்றும் உமர் போல, ஆண்கள் அமைதியாக இருந்தவரை போதும்.
அவர்கள் அடுத்த என்ன செய்வர்கள் என்பது குறித்து கவலைகொள்ள வேண்டும். அவர்களை சுற்றியுள்ள பெண்கள் கூறுவதை அவர்கள் கேட்க வேண்டும், பெண்களை பாதுகாப்பானவர்களாக உணரச் செய்ய வேண்டும்.
நல்லவேளையாக, இதை நான் இன்று கூறவில்லை. இது ஒரு ஆண் பிற ஆண்களுக்கு கூறுவது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்