பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஆஃப்கன் பெண்களின் புகைப்படங்கள்

கலாசார பன்முகத்தன்மையை கொண்ட நாடு ஆப்கானிஸ்தான் அதன் ஒவ்வொரு மாகாணத்திற்கும், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தன்மை, தனிப்பட்ட காலநிலை உண்டு. ஆஃப்கானிஸ்தானின் சில பகுதிகள் சமவெளியாகவும், சில பகுதிகள் விண்ணைத் தொடும் உயரம் கொண்ட மலைகளை கொண்டதாகவும் இருக்கிறது.

இந்த பன்முகத்தன்மையால், நாட்டின் வெவ்வேறு இடங்களில் வசிப்பவர்கள் மாறுபட்ட அடையாளங்களை கொண்டிருப்பார்கள் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதுதான். உண்ணும் உணவு, உடுத்தும் உடைகள், அருந்தும் பானங்கள் என அனைத்துமே இடத்திற்கு இடம் மாறுபடும்.

ஃபாத்திமா ஹுசைனி, ஈரானில் புகைப்படம் தொடர்பான கல்வியை பயின்ற மாணவி. அவர் ஆஃப்கன் பெண்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 2016-17 இல் தன்னுடைய புகைப்படங்களை கொண்டு, அவர் பல புகைப்பட கண்காட்சிகளை நடத்தினார்.

பிபிசி பாரசீக பிரிவுக்கு சில புகைப்படங்களை வழங்கியிருக்கிறார் ஃபாத்திமா.

தனது புகைப்படங்களின் மூலம், பல்வேறு இடங்களை சேர்ந்த ஆப்கானிய பெண்களின் முகங்களையும் அவர்களுடைய வாழ்க்கை சூழலையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார் ஃபாத்திமா.

வெவ்வேறு ஜிர்காக்களாக பிரிக்கப்பட்டுள்ள ஆஃப்கானிஸ்தானில் பல்வேறு வகையான பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.

தெஹ்ரானில் உள்ள ஒரு ஸ்டுடியோவில், பக்தூன், தாஜிக், உஸ்பெக், கிஜீபாஷ் இனப் பெண்களின் புகைப்படங்களை எடுத்தார் ஃபாத்திமா.

பாரம்பரிய, பழைய நம்பிக்கைகளை கொண்ட பெண்கள் புர்காக்களில் இருந்தாலும், தங்களுடைய வித்தியாசமான தனித்துவமான அழகை, அடையாளத்தை பதிவு செய்யவைக்க ஃபாத்திமா இந்த முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்த முயற்சியில் ஒரு பகுதியாக, பெண்களை தங்கள் பிரத்யேக பாரம்பரிய உடைகளில் புகைப்படங்கள் எடுத்தார்.

புகைப்படத் துறையில் பட்டப்படிப்பு பயின்றுவரும் ஃபாத்திமா, தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு ஆஃப்கன் பெண்கள்.

ஆஃப்கன் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக வசதியாக வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்துவருவதாக ஃபாத்திமா கூறுகிறார்.

நீண்ட காலமாக வன்முறை மற்றும் அடக்குமுறை ஆஃபாகானிஸ்தானை பாதித்திருந்தாலும், இந்த பெண்களிடமிருந்து அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை பறிக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :