மெக்சிகோ நிலநடுக்கம்: 90 பேர் பலியானதாக தகவல்

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்கு இடையே யாரெனும் சிக்கியுள்ளனரா என்று தேடும் மீட்புப் பணியினர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இடிபாடுகளுக்கு இடையே யாரெனும் சிக்கியுள்ளனரா என்று தேடும் மீட்புப் பணியினர்.

ரிக்டர் அளவுகோலில் 8.2 என்ற அளவில் பதிவான அந்த நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தின்போது மொத்தமாக 721 நில அதிர்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மெக்சிகன் சீஸ்மோலஜிக்கல் சர்வீஸ் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளில் எஞ்சியுள்ள உடைமைகளை சேகரிக்கும் மக்கள்.

பட மூலாதாரம், AFP/GETTY

படக்குறிப்பு, இடிபாடுகளில் எஞ்சியுள்ள உடைமைகளை சேகரிக்கும் மக்கள்.

மெக்சிகோவின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வுஹாகு மாகாணத்தில் அதிகபட்சமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

வுஹாகு மாகாணம் அதிகமான பாதிப்புகளைக் கண்டுள்ளது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, வுஹாகு மாகாணம் அதிகமான பாதிப்புகளைக் கண்டுள்ளது.

மெக்சிகோவில் கடந்த 100 ஆண்டுகளை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே சக்தி வாய்ந்தது.

மீட்புப் படையினர், அவசரகாலப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச் சடங்கின்போது கண்ணீர்விடும் உறவினர்கள்.

பட மூலாதாரம், AFP/getty

படக்குறிப்பு, நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச் சடங்கின்போது கண்ணீர்விடும் உறவினர்கள்.

நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த நாளான வெள்ளிக்கிழமையன்று, அந்நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதிகளை 'கேட்டியா' என்று பெயரிடப்பட்டுள்ள வெப்பமண்டலப் புயலொன்று தாக்கியது.

கேட்டியா புயல் உண்டாக்கிய நிலச்சரிவு.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கேட்டியா புயல் உண்டாக்கிய நிலச்சரிவு.

அந்தப் புயலால் உண்டான கனமழை ஏற்படுத்திய நிலச்சரிவுகளில் இருவர் கொல்லப்பட்டனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :