You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இர்மா சூறாவளி : நரகத்தில் ஒரு தேனிலவு
கியூபாவில் பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகள் இர்மா சூறாவளியின் தாக்கம் குறித்து பேசுகிறார்கள். அதில் ஒருவர் இந்த சூறாவளி நரகத்தித்துக்கு தேனிலவு சென்றதுபோல இருந்ததாக தெரிவித்தார்.
இர்மா சூறாவளி தீவில் நிலச்சரிவையும், கரீபியன் தீவுகள் முழுவதும் குறைந்தது 20 உயிர்களையும் காவு வாங்கிவிட்டது.
கியூபாவில் நிலைமை இவ்வாறாக இருக்கும் போது, தாமஸ் குக் (சுற்றுலா ஒருங்கிணைப்பு நிறுவனம்) சுற்றுலாவுக்காக அழைத்து வந்த மக்களை கியூபாவிலிருந்து திருப்பி அனுப்பாமல், வியாழக்கிழமை வரை மேலும் மேலும் மக்களை சுற்றுலாவுக்காக கியூபா விடுதிகளுக்கு அழைத்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் அந்த நிறுவனம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
எங்கள் வாடிக்கையாளர்களை அந்த தீவிலிருந்து வெளியேற்ற கியூப அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம் என்று தாமஸ் குக் நிறுவனத்தின் தொடர்பாளர் தெரிவித்தார்.
புதிதாக திருமணம் ஆன கிரேட் மான்செஸ்டரில் உள்ள பரியை சேர்ந்த சாம் லிவர், 50, கடந்த வாரம் தன் மனைவி செல்ஸியா, 30, உடன் தேனிலவுக்காக கியூபா சென்றார்.
விமர்சனத்துக்குள்ளான தாமஸ் குக்
இந்த தம்பதிகள் எப்படி தாங்கள் தாமஸ் குக்கின் 2500 பயணிகளுடன் கயோ கொகொ சொகுசு விடுதியிலிருந்து, வரடெரொ நகரத்துக்கு எட்டு மணி நேரம் பயணித்து சென்றோம் என்பதை பிபிசி-யிடம் விவரித்தார்.
லிவர் சொல்கிறார் : "நரகத்தித்துக்கு தேனிலவு சென்றதுபோல இது ஆகிக் கொண்டு இருக்கிறது" என்றார்.
மேலும் அவர், "அதிகாரிகள் எங்களை 11 பேருந்துகளில் அடைத்தனர். எட்டு மணி நேரம் எந்த உணவும் இல்லாமல் பயணித்து வாராதேரோவை அடைந்தோம்.
எங்களுடன் பயணித்தவர்களில் சிலர் நேற்று இரவுதான் மான்செஸ்டரில் வந்து இருக்கிறார்கள். இதன் மூலம் அந்த சுற்றுலா நிறுவனத்தின் இழிவான நடத்தையை கண்டறிந்தேன்" என்று விவரித்தார்.
லிவர், "சுற்றுலா விடுதியில் தங்கி இருந்த ஒரு கன்னடிய சுற்றுலா குழு வியாழக்கிழமை தங்கள் வீடுகளுக்கு திரும்பியது "
"நானும் என் மனைவியும் ஒரு விளையாட்டு அறையில் மற்ற சுற்றுலா பயணிகளுடன் அடைத்து வைக்கப்பட்டோம்.
அந்த நிறுவனம் சில மக்களை புதன்கிழமையே வெளியேற்றி இருக்கிறது. அப்படி வெளியேறியவர்களில், சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டிய அவர்களது ஊழியர்களும் அடக்கம். இது ஒரு இழிவான, வெட்ககேடான செயல்" என்கிறார் லிவர்.
புதன்கிழமை வெளியேறிய ஸ்டீவ் ஏல்லன், மக்களை வெளியேற்றுவதில் "பெரும் பிழைகள்" நடக்கிறது என்றார்
மேலும் அவர், அவர்கள் வெளிப்படையாக எதனையும் கூறவில்லை. அதனால் எங்களுக்கு யார் யாரெல்லாம் செல்கிறார்கள் எந்த நேரத்தில் செல்கிறார்கள் என்ற தகவல்கள் எங்களுக்கு தெரியாமல் போனது என்றார்.
"நாங்கள் இப்போது வரதெரோவில் சிக்கி இருக்கிறோம். ஒரு கெட்ட கனவு போல இதிலிருந்து மீள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்"
கியூப அதிகாரிகள் சொன்னதையே செய்தோம்
கியூப அதிகாரிகள் சொன்னதைதான் நாங்கள் செய்தோம். அவர்கள் தான் எங்களிடம் வாடிக்கையாளர்களை வரதெரோவுக்கு அனுப்ப சொன்னார்கள் என்று தாமஸ் குக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் அவர், பிரிட்டன் சுற்றுலா பயணிகளை மீண்டும் அவர்களது வீடுகளுக்கு அழைத்து வர மூன்று விமானங்களை ஞாயிற்றுக்கிழமை பயன்படுத்த உள்ளோம், என்றார்.
ராய் பின்சஸ், எனது மகள் தாமஸ் குக்கில் பணியாற்றுகிறார். அவர் கடந்த வியாழக்கிழமை கியூபாவுக்கு அவர்களால் அனுப்பப்பட்டார். இப்போது அந்த தீவில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார் என்றார்.
கியூப அதிகாரிகள் அறிவுறுத்தியவாரு, எங்கள் வாடிக்கையாளர்கள் போன்றே ஊழியர்கள் மற்றும் பிரதிநிதிகள் அனைவரும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தாமஸ் குக்கின் தொடர்பாளர் தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :