இர்மா சூறாவளி: கரீபியன் தீவுகள், கியூபாவை தொடர்ந்து அடுத்த இலக்கு ஃபுளோரிடா
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதியை கடுமையாக தாக்கியுள்ள இர்மா சூறாவளி அடுத்த சில மணி நேரங்களில் பெருநிலப்பரப்பை நெருங்கவுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஃபுளோரிடா மாகாண கடற்கரை பகுதிகளில் நீர் மட்டம் ஏற்கனவே அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் ஒரு மிகப்பெரிய சூறாவளி தாக்குதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பகுதிகளில் தங்கியிருந்த கிட்டத்தட்ட 6.3 மில்லியன் மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், மக்களை வெளியேறுமாறு கூறப்பட்ட இந்த உத்தரவு குறித்து சனிக்கிழமையன்று இம்மாநில ஆளுநர் தெரிவிக்கையில், நேரம் ஆகிவிட்டதால் எஞ்சியுள்ளவர்கள் தற்போது வெளியேற இயலாது என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, கரீபியன் தீவுகளை கடுமையாக தாக்கி பாதிப்பு உண்டாக்கிய இர்மா சூறாவளியால் குறைந்தது 25 பேர் இறந்துள்ளனர்.
புவியின் மேற்குப் பகுதியில் வீசும் வெப்பமண்டல புயல்களை சூறாவளி (ஆங்கிலத்தில் ஹரிக்கேன்) என்று அழைப்பது வழக்கம்.

இத்தகைய சூறாவளிகளை அவற்றின் வேகத்தை ஒட்டி ஒன்று முதல் ஐந்து வரையிலான எண்களைக் கொண்டு வகைபிரிக்கிறார்கள்.
அவற்றில் அதிகபட்ச வேகம் உடைய சூறாவளிகளுக்கு ஐந்தாம் எண் தரப்படுகிறது.
கரீபியன் தீவுகளை சூறையாடிவிட்டு, கியூபாவுக்கு நகர்ந்த இர்மா ஓர் ஐந்தாம் எண் சூறாவளி.
இதே வேளையில், கரீபியன் தீவுகளில் ஒன்றான பார்புடாவில் உள்ள 95 சதவீத கட்டடங்களும் இந்தச் சூறாவளியால் சேதமடைந்துவிட்டன. அந்தத் தீவில் குடியிருப்பதே சாத்தியமில்லாமல் போய்விட்டது.
தீவை மறு கட்டமைப்பு செய்ய 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு பிடிக்கும் என ஆன்டிகுவா-பார்புடா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரௌனி கூறியுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













