You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டன் தீ: சோகமான தேசிய மனநிலையை வெளிப்படுத்திய ராணி
"சமீபத்திய வாரங்களில் லண்டன் மற்றும் மான்செஸ்டரில் நிகழ்ந்த சோக சம்பவங்களை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சோகமான தேசிய மனநிலையில் இருந்து வெளிவருவது கடினமாக உள்ளது" என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் எலிபெத் மகாராணி தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய ராஜ்ஜியம் தொடர்ந்து கொடூர துயரங்களை அனுபவித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
குறைந்தது 30 பேர் இறப்பதற்கு காரணமான, தீயில் சிக்கிய க்ரின்ஃபெல் டவர் கட்டடத்தில் வசித்தோர், அரசு மேற்கொண்டு வருகின்ற ஒழுங்கற்ற நிவாரண நடவடிக்கைகளை கண்டித்துள்ள நிலையில், எலிசபெத் மகாராணியின் இந்த கூற்று வந்துள்ளது.
"கொடூரமான சோகம்"
லண்டனின் மேற்கு பகுதியில் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ ஏற்பட காரணமான பிராச்சனையின் ஆணிவேரைக் கண்டறிவோம் என்று பிரதமர் தெரீசா மே உறுதி அளித்த பிறகு, எலிசபெத் மகாராணியின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளில் இந்த கூற்று வந்துள்ளது.
வட கென்சிங்டன் எஸ்டேட்டுக்கு வெள்ளிக்கிழமை தெரீசா மே பயணம் மேற்கொணடபோது இகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தப் பேரழிவு தொடர்பாக அவருடைய பதில் நடவடிக்கைக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
வெஸ்ட்வே ஸ்போட்ஸ் மையத்திற்கு பயணம் மேற்கொண்டபோது, தொண்டர்களையும், குடியிருப்புவாசிகளையும், சமூகப் பிரதிநிதிகளையும் எலிசபெத் அரசி சந்தித்து பேசியுள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னால், மான்செஸ்டரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து காயமடைந்தோர் சிலரை எலிசபெத் அரசி மருத்துவமனையில் சந்தித்தார்.
"மிகவும் தேவையில் இருப்போருக்கு ஆறுதலையும், ஆதரவையும் வழங்க நாடு முழுவதுமுள்ள மக்கள் அனைவரும் விரைவாக உணர்ந்திருப்பதை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறேள்" என்று முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எலிசபெத் மகாராணி தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு சோதனை
"துன்பத்தை எதிர்கொள்ளும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் உறுதி சோதிக்கப்படுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்,
"நம்முடைய சோகத்தில் ஒன்றாகி, காயங்களாலும், இழப்புக்களாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வாழ்க்கைகளை மீள்கட்டமைக்கும் எல்லாோருக்கும் ஆதரவு வழங்குவதற்கு பயம் அல்லது தயக்கம் இல்லாமல் ஒரே மனத்தோடு நாம் உள்ளோம்" என்று எலிசபெத் மகாராணி கூறியுள்ளார்.
லண்டனின் மேற்குப் பகுதியில் ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறை கொண்ட 120 வீடுகளை உள்ளடக்கிய 24 மாடிக் கட்டடத்தில் பிரிட்டன் நேரப்படி புதன்கிழமை அதிகாலை அளவில் தீ பற்றி எரிய தொடங்கியது.
ஏறக்குறைய அனைத்து மாடிகளிலும் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியதால், 200 தீயணைப்பு வீரர்கள், 24 மணிநேரம் செலவிட்டு இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அதிக ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று லண்டனில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
எலிசபெத் ராணி: ஆட்சியில் 65 ஆண்டுகள்
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்