You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஆட்சி அமைக்க அனுமதி கோருகிறார் தெரீசா மே
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைப்பதற்காக, பிரிட்டிஷ் ராணியிடமிருந்து அனுமதி பெறுவதற்கு பிரிட்டிஷ் நேரப்படி 12.30 மணிக்கு தெரீசா மே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு செல்லவிருக்கிறார்.
அவருடைய பெரும்பான்மையற்ற நிர்வாகத்தை ஜனநாயக ஒன்றியக் கட்சி ( டி.யூ.பி) ஆதரிக்கும் என்ற புரிதலோடு பிரதமர் பதவியில் தொடருவதற்கு தெரீசா மே முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இன்னும் ஒரு தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 326 இருக்கைகளில் 8 குறைவாக கன்சர்வேட்டிவ் கட்சி உள்ளது.
"தொழிலாளர் கட்சி பணிபுரிய தயாராக இருக்கிறது" என்று கூறி, தெரீசா மே பதவி விலக வேண்டும் என்று ஜெர்மி கார்பைன் தெரிவித்திருக்கிறார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் ஏமாற்றமான இரவு வேளைக்கு பிறகு, இந்த தேர்தலை அறிவித்தபோது, இந்த கட்சிக்கு இருந்ததைவிட 12 இருக்கைகளுக்கு குறைவாகத்தான் தற்போது கிடைத்திருக்கிறது. எனவே, தற்போது ஆட்சி நடத்த பிற கட்சிகளின் ஆதரவு தெரீசா மேவுக்கு தேவைப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சி 319 இடங்களைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் கட்சி 261, ஸ்காட்லாந்து தேசிய கட்சி 35, லிபரல் ஜனநாயக கட்சி 12, ஜனநாயக ஒன்றியக் கட்சி 10 என பிற கட்சிகள் நாடாளுமன்ற இடங்களை வென்றுள்ளன.
கன்சர்வேட்டிவ் மற்றும் ஜனநாயக ஒன்றிய கட்சிகள் இணைந்து மொத்தம் 329 இடங்களை இவை நாடாளுமன்றத்தில் பெற்றிருக்கும்.
10 நாட்களுக்கு முன்னர் தான் பிரொக்ஸிட் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் ஸ்திரத்தன்மை தேவைப்படுவதாக கூறி, பிரதமராக தொடரப்போவதை தெரீசா மே தெரிவித்திருக்கிறார்.
ஜனநாயக ஒன்றிய கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சியை ஆதரிக்கும் வகையில் எதாவது ஏற்பாடுகளை தெரீசா மே செய்வார் என்று நம்பப்படுகிறது.
பிரிட்டிஷ் தேர்தலில் உண்மையான வெற்றி யாருக்கு?
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்