விமானியின்றி இயங்கும் பயணியர் விமான தொழில்நுட்பம் ஆய்வு - போயிங்

விமானி இல்லாமல் பயணியர் விமானத்தை இயக்குகின்ற தொழில்நுட்பம் பற்றி ஆய்வு செய்து வருவதாக உலகின் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது.

அந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை கட்டமைப்பு ஏற்கெனவே உள்ளது என்று போயிங் விமான நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாட்டிற்கான துணை தலைவர் மைக் சின்நெட் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், சுயமாக பறக்கின்ற இத்தகைய விமானங்கள் கடினமான பாதுகாப்பு தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டும்

அவசரமாக தரையிறங்குவதை இத்தகைய விமானங்கள் நிறைவேற்றுமா என்பது தெளிவாகவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமானதொரு வணிக விமான தயாரிப்பு தொழில்துறையின் நிகழ்வான பாரிஸ் விமானக் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் பேசுகின்றபோது சின்நெட் இதனை தெரிவித்தார்.

சமீபத்திய ஆண்டுகளில், விமானங்கள் மேலெழுவதை, வேகமாக பறப்பதை, தரையிறங்குவதை வழக்கமாக கையாளுகின்ற விமான ஊழியர்கள் கணினிகளோடு விழுந்த சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்