You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரகசிய தகவலைப் பரிமாறிய விவகாரம்: சர்ச்சையில் தலையிடுகிறார் ரஷிய அதிபர் புதின்
கடந்த வாரம் ரஷிய வெளியுறவு அமைச்சருடன் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தின் போது, அதிபர் ரகசிய பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டாரா என்பது பற்றிய சர்ச்சையில், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தலையிட்டுள்ளார்.
ரஷிய அமைச்சரிடம் எந்த ரகசியங்களும் அளிக்கப்படவில்லை என்று புதின் தெரிவித்துள்ளார்.
மேலும் தேவைபட்டால், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கூட்டத்தின் விவரங்களை அளிக்கத் தயார் என்றும் தெரிவித்தார். அமெரிக்காவில் ரஷிய எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்துவோர் முட்டாள்கள் அல்லது நேர்மையற்றவர்கள் என்று தெரிவித்தார்.
தனது முக்கிய அரசியல் போட்டியாளர் எல்லாவற்றிலும் ரஷ்யாவை தொடர்புபடுத்தி, தொடர் நெருக்கடிகளில் சிக்குவதை பார்த்து ரஷ்யா ரசித்துக் கொண்டிருப்பதாக மாஸ்கோவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
முன்னாள் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளின் மற்றும் மாஸ்கோவிற்கு இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணையைக் கைவிடும்படி அதிபர் டிரம்ப் கேட்டார் என்று எப் பி ஐயின் முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமி சுட்டிக்காட்டிய குறிப்பாணை ஒன்றை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளனன.
இரண்டு விவகாரங்களிலும் அமெரிக்காவுக்கு அழுத்தம் அதிகரித்து வருகின்றது. ஜனநாயக கட்சியினர் சுயாதீன ஆணையத்தை தொடங்கும் நகர்வுகள் வேகம் பெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம், கடலோரக் காவல்படையின் புதிய பட்டதாரிகள் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், ''வரலாற்றில் எந்த ஓர் அரசியல்வாதியும் மோசமாகவோ நியாயமற்ற முறையிலோ நடத்தப்பட்டது இல்லை,'' என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் புதன் கிழமை ரஷியாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாஃப்ரோவ் மற்றும் ரஷிய தூதர் செர்ஜி கிஸ்லாக் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்தனர்.
2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா என்பது தொடர்பான எப்.பி.ஐ விசாரணை மற்றும் நாடாளுமன்றத்தின் விசாரணைகளுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது.
அதேபோல ஜேம்ஸ் கோமி பதவி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளே இந்த சந்திப்பு நடைபெற்றது.
டிரம்ப், ரஷ்ய அதிகாரிகளிடம் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு தொடர்பான தகவல்களை அளித்துள்ளார் என்றும் அது தகவலை அளித்த அமெரிக்கக் கூட்டாளி நாட்டுக்கு ஆபத்தானது என்றும் திங்களன்று, வாஷிங்டன் போஸ்டும், பல அமெரிக்க ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன.
இரண்டாவதாக எப்.பி.ஐ அமைப்பின் தலைவர் கோமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் செல்வாக்கு இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்திய நேரத்தில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ரஷிய தூதர் செல்கெய் கிஸ்லேக்குடன் நடந்த சந்திப்பின்போது பரிமாறப்பட்ட தகவல்கள் தொடர்பாக அரசுக்கு தவறான தகவல்களைக் கொடுத்ததாக, ஏற்கெனவே, டிரம்பின் முதலாவது தேசிய ஆலோசகர் மைக்கெல் ஃபிளின் பதவி நீக்கப்பட்டார்.
அதிபர் டிரம்ப்பை பிப்ரவரி 14ம் தேதி சந்தித்ததற்கு பிறகு கோமி எழுதிய குறிப்பாணையில், டிரம்ப், பிளின் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையை நிறுத்திவிடுமாறு கேட்டுக்கொண்டார் என்று செவ்வாய்க்கிழமை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்