You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷியா தேவாலயத்தில் போக்கிமான் கோ விளையாடிய நபருக்கு சிறை
ரஷியாவில் வலைப்பூ பதிவு ஒன்றில் தேவாலயத்தில் போக்கிமான் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்ட நபருக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மூன்றரை ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் யக்கட்டரீன்பர்க் நகரின் நீதிமன்றம் ரோஸ்லான் சக்கலோஃப்ஸ்கி என்னும் அந்நபர், மத நம்பிக்கை கொண்டவர்களை அவமதிக்கும் வகையிலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் குற்றம் இழைத்ததாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால் 22 வயதாகும் சக்கலோஃப்ஸ்கி, தான் குற்றம் இழைக்கவில்லை என வாதிட்டார்.
2016 ஆம் ஆண்டு உள்ளூர் பாரம்பரிய தேவலாயம் ஒன்றில் போக்கிமான் விளையாடும் வீடியோ ஒன்றை தானே படம் பிடித்தார் சக்கலோஃப்ஸ்கி.
அதற்கு சிறிது நேரத்திற்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த செய்திகளையும் வாசிக்கலாம்
வியாழனன்று சக்கலோஃப்ஸ்கியின் வீட்டில் சோதனையிட்ட போது வீடியோ பொருத்தப்பட்ட பேனா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால், "சிறப்பான தொழில்நுட்ப சாதனங்களை சட்டவிரோதமாக" கடத்தியாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
வழக்கின் விசாரணையின் போது சக்கலோஃப்ஸ்கிக்கு மூன்றரை வருட சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த வலைப்பூ நபர் சற்று நிம்மதியாக காணப்பட்டார்.
"பத்திரிக்கையாளர்களின் ஆதரவு இல்லை என்றால் எனக்கு நிஜமான சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கும்" என அவர் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில் தேவாலயத்திற்குள் செல்வதற்கு முன்னதாக கைது செய்யப்படுவோம் என்று ஆபத்தை கருத்தில் கொள்வது "முழு முட்டாள்தனம்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் தேவாலயத்திற்குள் ஸ்மாட் ஃபோனுடன் செல்வதால் என்ன குற்றம் ஏற்பட போகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
போக்கிமான் குறித்த பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்