You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க கடலோரப் பகுதிகளில் எண்ணெய் அகழ்வாய்வு: ஒபாமா உத்தரவை மாற்றினார் டிரம்ப்
அமெரிக்க எரிசக்தி துறையில் எண்ணெய் அகழ்வாய்வு பணிகளுக்கு இருக்கும் கட்டுப்பாட்டை தளர்த்தும் நோக்கத்தில், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் எண்ணெய் அகழ்வாய்வுக்கு அனுமதிக்கும் நிர்வாக ஆணை ஒன்றில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
எண்ணெய்ச் சந்தையில் சரிவு காணப்பட்டாலும், இதனால் பல்லாயிரக்கணக்கான வேலைவாயப்புக்கள் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார்.
பெருங்கடலில் வளர்ச்சி்ப் பணிகளை மேற்கொள்ள முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விதித்திருந்த கட்டுப்பாடுகளை டிரம்பின் இந்த நிர்வாக ஆணை தளர்த்தும்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணயக்கைதிகள் போல இருப்பதற்கு பதிலாக இது சிறந்த முடிவுதான் என்று உள்துறை செயலாளர் ரயான் ஸின்கெ கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பராக் ஒபாமாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை நீக்குவதும், வாக்காளர்களுக்கு டிரம்ப் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
அமெரிக்காவின் முதலாவது கடல் சக்தி தொலைநோக்குத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த ஆணையில் அதிபர் கையெழுத்தியிட்டுள்ள நிலையில், கடலோரங்களில் அதிக அளவிலான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு படிமங்கள் உள்பட அமெரிக்கா நம்ப முடியாத அளவுக்கு இயற்கை வளங்களை பெற்றிருக்கிறது. ஆனால், துரப்பண மற்றும் எண்ணெய் உற்பத்திற்கு 94 சதவீத கடற்கரைகளை மத்திய அரசு மூடி வைத்துவிட்டது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
காணொளி: 100 நாட்கள் ஆட்சியில் டிரம்ப் என்ன செய்தார்?
"இதனால், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்களும், மில்லியன் கணக்கான செல்வங்களும் அமெரிக்காவுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க மத்திய அரசின் கடலோர பகுதிகளில் நடத்த வேண்டிய பதியதொரு வளர்ச்சி திட்டத்தை வகுக்க அமெரிக்க உள்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆணையை மாற்றிவிடுவதால், இந்தத் திட்டத்தில், எவ்வளவு வருமானம் கிடைக்கலாம் என்பது விவாதத்திற்குரிய விடயமே.
ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள மீளாய்வின்படி, 2013 முதல் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மெக்ஸிகோவின் மத்திய குடாவில் எண்ணெய் துரப்பணப் பணிக்கு கடற்கரையை குத்தகைக்கு எடுக்கின்ற ஆண்டு தொகை 75 விழுக்காட்டுக்கு மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளையில், அதிபர் டிரம்பின் முடிவுக்கு சவால் விடுக்கப்போவதாக சுற்றுச்சூழல் குழுக்கள் தெரிவித்திருக்கின்றன.
கடலோரங்களில் துரப்பணப் பணியை விரிவாக்குவதை நோக்கிய இன்றைய இந்த அவசர முடிவு, சந்தை நிலவரங்களுக்கு எதிராக இருப்பதோடு, தேவையில்லாத திட்டம் என்பதால், அசட்டையான மடிவு என்று லாப நோக்கமற்ற இயற்கைவளப் பாதுகாப்பு குழுவான "கன்சர்வேட்டிவ்ஸ் ஃபார் ரெஸ்பான்சிபிள் ஸ்டீவேர்ஷிப்" குழுவின் அதிபர் டேவிட் ஜென்கின்ஸ் தெரிவித்திருக்கிறார்.
வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரிய படைகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்