You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பூனைகளைப் பற்றி 10 ருசிகர தகவல்கள்
பூனை வளர்ப்பது உங்களுக்கு பிடிக்குமா? உங்கள் செல்லப்பிராணியின் மீது அதீத அன்பு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்கு பூனையை பற்றிய இந்த 10 விஷயங்கள் தெரியுமா?
- சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன.
- பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.
- பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.
- அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.
- பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது.
- பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.
- பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது.
- பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கபடும்.
- பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை.
- பாலூட்டிகள் மற்றும் பறவைகளைச் சேர்ந்த 33 இனம் பூனைகளால் அழிந்துள்ளது. மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்