You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செளதி அரேபியாவில் உருவாகிறது உலகின் மிகப்பெரிய உல்லாச நகரம்
ரியாத்தின் எல்லையில் உலகின் முன்மாதிரியான பொழுதுபோக்கு நகரம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை செளதி அரேபியா வெளியிட்டுள்ளது.
லாஸ் வேகாஸை போன்று 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த நகரம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளுக்கான ஓர் இடமாக அமையும். மேலும் அதில் சிக்ஸ் ஃப்ளாக் பூங்கா மற்றும் ஒரு சஃபாரி பூங்காவும் அமைய உள்ளது.
உலகில் முதல்முறையாக அம்மாதிரியான நகரம் அமையவுள்ளதாக அந்த திட்டத்திற்கான அறிவிப்பில் பெருமையுடன் தெரிவிக்கப்பட்டது.
அந்த நகரத்திற்கான கட்டுமானப் பணி அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் தொடங்கும்; மேலும் அதன் முதல் கட்டப் பணி 2022-ஆம் ஆண்டில் நிறைவடையும்.
ஒரு வருடத்திற்கு முன் துணை இளவரசர், முகமது பின் சல்மானால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவது மற்றும் பல்வேறு திட்டங்களால், அரசு எண்ணை வருமானத்தை மட்டும் சார்ந்திருப்பதை குறைப்பது ஆகியவற்றை இலக்காக கொண்ட விஷன் 2030, என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகரம் அமைகிறது.
ரியாதின் அளவில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியாக அமைய உள்ள இந்த பொழுதுபோக்கு நகரத்திற்கான அறிவிப்புதான் அது தொடர்பான சமீபத்திய அறிவிப்பாகும்.
இந்த நகரம் பார்வையாளர்களை மட்டும் ஈர்க்காமல், தலைநகரில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கும் மேலும் அதிக பொழுதுபோக்கு, சந்தோஷம், மற்றும் உற்சாகம் ஆகியவற்றை வழங்கும் என அதிகாரிகள் நம்புவதாக தெரிவித்தனர்.
அங்குள்ள இளைஞர்களுக்கு பெருமளவு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கமும் இதில் அடங்கும்.
இருப்பினும் ஆண்கள்,பெண்கள் பெரியளவில் பிரித்துப் பார்க்கப்படும் நாட்டில், சிக்ஸ் ஃபளாக் போன்ற பூங்காக்கள் எவ்வாறு செயல்படும் என்று தெளிவாக தெரியவில்லை. இதுவரை சவுதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் குழந்தைகளை இலக்காக வைத்தே செயல்படுகின்றன.
செளதி அரேபியா தொடர்பான பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்