You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்பின் உதவியாளராக இணைந்தார் மகள் இவான்கா
அமெரிக்க அதிபரின் உதவியாளர் என்ற நிலையில் ஊதியம் வழங்கப்படாத பணியாளராக இவான்கா டிரம்ப் தன்னுடைய தந்தையின் நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
அதிகாரப்பூவமற்ற முறையில் பணிபுரியும் தன்னுடைய தொடக்க திட்டத்திற்கு அறநெறிமுறை வல்லுநர்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்புக்களை தொடர்ந்து அமெரிக்காவின் முதல் மகளான இவான்கா டிரம்ப் இதற்கு இசைந்திருக்கிறார்.
தன்னுடைய தனிப்பட்ட திறனோடு, அதிபருக்கு ஆலோசனை வழங்குவதில் சிலர் தெரிவித்த கவலைகளுக்கு செவிமடுத்துள்ளதாக 35 வயதாகும் இவான்கா டிரம்ப் கூறியிருக்கிறார்.
இவருடைய கணவரான ஜாரெட்டு குஷ்னெர் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மூத்த ஆலோசகராக விளங்கி வருகிறார்.
அமெரிக்காவின் முதல் மகளாக இதுவரை யாருமே எடுத்திராத இந்த முயற்சியை இவான்கா டிரம்ப் எடுத்திருப்பதில் மகிழ்ச்சியடைவதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை கவுன்சிலோடும் தன்னுடைய தனிப்பட்ட கவுன்சிலோடும் இதற்கு முன்னால் நிறைவேற்றப்படாத இந்த பணியை ஆற்றுவதில் சிறந்த நம்பிக்கையோடு இருப்பதாக இவான்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
நிர்வாகத்தில் முறையாக சேர்க்கப்படாமல், இவான்கா டிரம்புக்கு மேற்கு பகுதி அலவலகத்தையும். பாதுகாப்பு அனுமதியையும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டதற்கு அறநெறி வல்லுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இவான்கா டிரம்ப் ஆற்றுகின்ற பணி அதிகாரப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அப்படியானால்தான் அவருடைய தந்தை அதிபராக இருக்கும் வேளையில், அனைத்தையும் தனக்கு சாதகமாக காய் நகர்த்துகின்ற முரண்பாடு சட்டம் உள்பட மத்திய ஊழியர் வெளிப்படைதன்மைக்கும், அறநெறி தரங்களுக்கும் அவர் உட்படுவார் என்று விமசகர்கள் தெரிவித்திருந்தனர்.
தன்னுடைய வாடிக்கையாளர், தேவையான நிதிநிலை அறிக்கையையை வெளியிடுவதோடு. அதிகாரப்பூர்வ அறநெறி விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவார் என்றும் இவான்கா டிரம்பின் வழக்கறிஞர் ஜாமியி கொரிலிக் தெரிவித்திருக்கிறார்.
"மிகவும் பெரியதொரு அறநெறி பேரழிவுக்கு மாற்றாக வெள்ளை மாளிகை அதனுடைய உணர்வுக்கு வந்துள்ளது" என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் அறிநெறி ஆலோசகர் நோர்மான் இசென் அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
"புனிதத்தின் தனிப்பட்ட தருணமாக மட்டுமே இது மாறிவிடக் கூடாது என்று நம்புவோமாக" என்று அவர் கூறியிருக்கிறார்.
இவான்கா டிரம்பின் நியமனத்தை பற்றி வெள்ளை மாளிகையின் கவுன்சில் உறுப்பினர் டோன் மெக்கென் புகார் தெரிவிப்பதாக எழுதியிருந்த பல வழக்கறிஞர்கள் மற்றும் அரசு கண்காணிப்பு வல்லுநர்களில் இசெனும் இருந்தார்.
வர்த்தக விவகாரங்களில் நாட்டு பணிக்கும், அவருக்கும் இருந்த சட்ட முரண்களை கூடியவரை குறைக்க இவான்கா டிரம்ப் ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
தன்னுடைய பெயரில் இருந்த நவநாகரிக முத்திரையுடன் கூடிய நிர்வாகத்தை பிறரிடம் கொடுத்துவிட்டு, அதனை கண்காணிக்க அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார்.
சொத்துமனை நிறுவனத்திடம் இருந்த குறிக்கப்பட்ட தொகையை பெற்றுக்கொள்வதை தொடருகின்ற அதேவேளையில். அதிபர் டிரம்பின் நிர்வாகத்திலுள்ள தன்னுடைய தலைமை பங்கிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்