பாரிஸ் நகருக்கு சிம்மசொப்பனமாக மாறிய 'எலிப்படை'

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிகரித்துவரும் எலி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், நகரின் தெருக்களில் உள்ள சிகரெட் துண்டுகளை சுத்தப்படுத்தவும் புதிய திட்டங்களை பாரிஸ் மேயர் ஆனி ஹிடால்கோ அறிவித்துள்ளார்.

எலிகளை பிடிக்க பயன்படுத்தப்படும் புதிய பொறிகளை வாங்க நகர நிர்வாகம் 1.6 மில்லியன் டாலர்கள் ; செலவிடும் என்றும், பொது இடங்களில் ஆஷ்ட்ரேக்கள் வைக்கப்படும் என்றும் ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.

பாரிஸ்நகர வாசிகள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு எலிகள் என்ற விகித்த்தில் எலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எலிகளுக்கு எதிரான பாரிஸ் நகர நிர்வாகத்தின் அதிரடி ஒரு பகுதேயாக கடந்த டிசம்பர் மாதம் தலைநகரில் உள்ள சில பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் பாரிஸில் சராசரியாக சுமார் 150 டன்னுக்கும் அதிகமான சிகரெட் துண்டுகளை எடுக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்