கினியில் 47 ஆயிரத்து மேலாக போலி பல்கலைக்கழக மாணவர்கள்

கினி நாட்டில் பல்கலைக்கழகங்களில்47 ஆயிரத்துக்கு அதிகமான போலி மாணவர்கள் பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மாணவர்கள் அல்லாதோரை களை எடுத்துவிட்ட பயோமெட்ரிக் பதிவு செயல்முறைக்கு பின்னர், இந்த புள்ளிவிபரங்களை அந்நாட்டு கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ள பாடங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையில் அரசு மானிய தொகை வழங்கப்படுகிறது.

அதிக மானிய தொகையை பெறுவதற்காக போலி மாணவர் பதிவுகளை சில பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்