சீனாவில் பாண்டாக்களை பாதுகாக்க 27 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் பூங்கா
பாண்டாக்களை பாதுகாப்பதற்காக, 27,000 சதுர கிலோ மீட்டர் அளவிலான தேசிய வனப்பகுதியை ஒதுக்கியுள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
33 வகையான, வன பாண்டாக்களை பாதுகாக்க ஷான்ஷி, சச்சுவான் மற்றும் கேன்சூ ஆகிய மாகாணங்களில் அந்த பூங்கா அமையவுள்ளது.
சரணாலயங்களிற்கு வெளியே வாழும் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேற்பட்ட சீன வன பாண்டாக்களை பாதுகாக்க இந்த புதிய தேசிய பூங்கா முயற்சிகளை மேற்கொள்ளும்.
இம்மாதிரியாக, அழிவில் இருக்கும் உயிரினங்களான சைபீரிய புலிகள், திபெத்திய ஆண்டிலோப் மற்றும் ஆசிய யானைகள் ஆகியவற்றை பாதுகாக்க பெரிய பூங்காக்களை அமைக்கும் திட்டங்களையும் பரிசீலித்து வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












