அலெப்போ போரில் ரசாயன ஆயுதங்கள் : சிரியா அரசாங்கம் மீது ஐ.நா குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு சிரியாவில் அலெப்போ நகரை கைப்பற்றும் நோக்கில் நடைபெற்ற போரின் நடத்தை குறித்து முடிவுகளை தெரிவித்துள்ள ஐ.நா., அந்நாட்டின் விமான படைகள் ரசாயன ஆயுதங்களை கொண்டு போர் குற்றங்களை இழைத்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அரசுப்படைகள் ஐ.நாவின் வாகன தொடரணி மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாகவும், அதில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
போராளிகள் வசமிருந்து மருத்துவமனைகள் மற்றும் சந்தைப்பகுதிகள் குறிவைக்கப்பட்டு அதன் மீது ரஷ்யா ஆதரவுப்பெற்ற படைகள் நீடித்த தாக்குதல்களை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், சர்வதேச விதிகளை ரஷ்ய படையினர் மீறியுள்ளார்கள் என்பதை முடிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மேலும், போராளிகளும் இந்த போரில் போர்க்குற்றங்களை இழைத்ததாகவும், பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி அரசு கட்டுப்பாட்டிலிருந்து மாவட்டங்களில் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












