You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரிய தலைவரின் சகோதரர் படுகொலையில் மேலும் 4 சந்தேக நபர்கள்
வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரனின் படுகொலை தொடர்பாக இன்னும் குறைந்தது நான்கு பேரை தேடி வருவதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த கொலைக்கு பின்னால் வட கொரிய அரசு இருப்பதாக தென் கொரியாவின் ஐக்கிய விவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரத்தில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து ரசாயனம் தெளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் கிம் ஜோங் நாம் இறந்தார்.
புதிதாக நான்கு ஆண்களை சந்தேக நபர்களாக இனம்கண்டுள்ள மலேசிய காவல்துறையினர், அவர்கள் ஏற்கெனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
ஒரு பெண் உள்பட நான்கு பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தான் இந்த குற்றத்தில் பங்கேற்றதாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார்.
கிம் ஜோங் நாமின் உறவினரில் அடுத்தவர், அவரது உடலை இன்னும் இரண்டு வாரங்களில் கேட்டுபெற வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
வட கொரியாவை ஆளும் நபர்களின் வரிசையில் இருந்த கிம் ஜோங் நாம், மறைந்த தந்தை கிம் ஜோங் இல்லால் அந்த இடத்தை இழந்தார். அவரது இளைய, ஒன்றுவிட்ட சகோதரர் பதவி ஏற்ற பிறகு, நாடு கடந்து வாழ்ந்து வந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்