"எனக்கு மாற்றாக தலைவர் இல்லை" - முகாபே

பட மூலாதாரம், JEKESAI NJIKIZANA/AFP/Getty Images
ஆளும் கட்சியான ஸானு-பிஎப் எனப்படும் ஜிம்பாவே ஆப்ரிக்க தேசிய ஐக்கிய பேட்ரியாட்டிக் முன்னணியும், ஜிம்பாவே மக்களும் 2018 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற பொது தேர்தல்களில் தனக்கு சாத்தியமான வாரிசாக யாரையும் கருதவில்லை என்று ஜிம்பாவே அதிபர் ராபர்ட் முகாபே தெரிவித்திருக்கிறார்.
அவருடைய 93-வது பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்கிழமை அரசு ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில், அவர் இருக்கின்ற பதவியில் அமர்பவராக ஏற்றுகொள்ளக்கூடிய இன்னொரு நபராக யாரையும் பெரும்பான்மையான ஜிம்பாவே மக்கள் பார்க்கவில்லை என்று முகாபே தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், BAY ISMOYO/AFP/Getty Images
1980 ஆம் ஆண்டிலிருந்து இந்த மூத்த தலைவர் அதிகாரத்தில் இருந்து வருகிறார்.
அடுத்த அதிபர் தேர்தலுக்கு முகாபேதான் வேட்பாளர் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸானு-பிஎப் உறுதி செய்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












