You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாயமான எம்ஹெச் 370 விமான பாகங்களை தேடும் பணி நிறுத்தம்
மாயமான எம்ஹெச் 370 மலேசிய விமானத்தின் பாகங்களை தேடுகின்ற பணிகளை முற்றிலும் நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதற்கு, அந்த விமானத்தில் பயணம் செய்தோரின் உறவினர்கள் ஏமாற்றம் தெரிவித்திருப்பதோடு, இந்த முடிவு தொடர்பாக கோபம் அடைந்துள்ளனர்.
விமானப் போக்குவரத்து பாதுகாப்புக்கு, 370 விமானத்தை தொடர்ந்து தேடுவது அவசியம் என்று இந்த பயணிகள் உறவினர்களுக்கான ஆதரவுக்குழு ஒன்று தெரிவித்தது.
இவ்விபத்து,விமானப் போக்குவரத்துத் துறையில் தீர்க்கப்படாத பெரும் புதிர்களில் ஒன்றாகவே இருந்துவருகிறது.
2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் மாநகருக்கு பயணமாக வழியில் மாயமான இந்த விமானத்தில் 239 பேர் பயணம் செய்தனர்.
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால், இந்தியப் பெருங்கடலில், இது விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் வாசிக்க:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்