யூத இனப்படுகொலை பற்றிய ஆவணங்களின் முழு விவரப்பட்டியல் இணையத்தில் வெளியீடு

யூத இனப்படுகொலை தொடர்பான நாஜிக்களின் ஆவணங்களை பாதுகாக்கும் ஜெர்மனியின் ஆவணக் காப்பகம் அதனுடைய முழு விவரப்பட்டியலையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணக் காப்பகத்தில் இருக்கும் 30 மில்லியன் ஆவணங்களை பரந்துபட்ட பார்வைக்கு வழங்கியிருப்பதாக சர்வதேச ஆவண சேவை அமைப்பு அறிவித்திருக்கிறது.

நாஜிக்களால் சித்ரவதை செய்யப்பட்டு இறந்தோரையும், அதிலிருந்து தப்பி, உயிர் வாழ்வோரையும் பற்றி ஆய்வு செய்வதற்கான வசதிகளுக்கு இது உதவும்.

உண்மையான ஆவணங்களை பார்க்க விரும்புகின்ற ஆய்வாளர்கள் மத்திய நகரமான பேட் அரோல்செனில் அமைந்துள்ள ஆவணக்காப்பகத்திற்கு செல்ல வேண்டும்.

2007 ஆம் ஆண்டுதான் இந்த ஆவணங்கள் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்