கட்டடக்கலை 2016 (புகைப்படத் தொகுப்பு)

ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் இருந்து இந்த ஆண்டு கட்டடக்கலை புகைப்படப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 புகைப்படங்கள் இவை. இந்த புகைப்படங்களை எடுத்த புகைப்படக் கலைஞர்களின் குறிப்புக்களோடு அவற்றை உங்களுக்கு வழங்குகிறோம்.

ரோமன் ரோப்ரோக்: "ஒரு வகையான இந்த அழகான கட்டுப்பாட்டு அறை, அலங்கார கலை வடிவத்தை சேர்ந்த ஒன்றாகும்"

பட மூலாதாரம், Roman Robroek

படக்குறிப்பு, ரோமன் ரோப்ரோக்: "ஒரு வகையான இந்த அழகான கட்டுப்பாட்டு அறை, அலங்கார கலை வடிவத்தை சேர்ந்த ஒன்றாகும்"
பார்வையாளரின் கவனத்தை திசைதிருப்ப, ஒளியை பயன்படுத்தாமல் இருப்பது

பட மூலாதாரம், Jonathan Walland

படக்குறிப்பு, ஜோனத்தான் வால்லண்ட்: "புகைப்படக் கலைஞர் எடுத்துகாட்ட விரும்புவதை நோக்கி இருக்கும், பார்வையாளரின் கவனத்தை திசைதிருப்ப, ஒளியை பயன்படுத்தாமல் இருப்பதை விளக்குகின்ற புகைப்படத் தொடரின் ஒரு பகுதி தான் இந்த புகைப்படம்"
செனாடு தாக்மாஸ்: "தெளிவான கட்டடக்கலை பார்வையை விவரித்து வழங்கும் அசாதாரணமான சிறிய வடிவம்"

பட மூலாதாரம், Senad Tahmaz

படக்குறிப்பு, செனாடு தாக்மாஸ்: "தெளிவான கட்டடக்கலை பார்வையை விவரித்து வழங்கும் அசாதாரணமான சிறிய வடிவம்"
நியூ யார்க் நகரத்தின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த ஃப்ளாடிரான் கட்டடம் பனிப்புயலின்போது காட்சியளிக்கிறது

பட மூலாதாரம், Michele Palazzo

படக்குறிப்பு, மிச்சேலி பாலாஸோ: "சீறும் காற்று மற்றும் கடும் பனிக்கு இடையில் புகுந்து வரும் ராட்சத கப்பலைப்போல, நியூ யார்க் நகரத்தின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த ஃப்ளாடிரான் கட்டடம் பனிப்புயலின்போது காட்சியளிக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி வரலாற்று புகழ்மிக்க புயல் "ஜோனாஸ்" தாக்கியபோது எடுத்த இந்த படம். அந்த புயலுக்கு பின்னர் இந்தப்படம் பெருமளவில் பகிரப்பட்டது.
டெரிக் ஸ்னீ: காற்றை அறுவடை செய்ய தாவரங்களை பயன்படுத்துவதுபோல நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். நல்லது, இப்போது அது நம்மால் முடியும். பெற்றோரே, பெரியோரே, சிறுவர்களே, சிறுமியரே....டர்போ டான்டிலையன் காற்றுப்பண்ணை".

பட மூலாதாரம், Derek Snee

படக்குறிப்பு, டெரிக் ஸ்னீ: காற்றை அறுவடை செய்ய தாவரங்களை பயன்படுத்துவதுபோல நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். நல்லது, இப்போது அது நம்மால் முடியும். பெற்றோரே, பெரியோரே, சிறுவர்களே, சிறுமியரே....டர்போ டான்டிலையன் காற்றுப்பண்ணை".
பார்பரா ரோஸ்சி: "கட்டடம் இடிக்கப்படும் இந்த புகைப்படத்தை நான்தான் எடுத்தேன். இது மாற்றத்தை, செயல்பாட்டை மற்றும் அழகைக் காட்டுகிறது"

பட மூலாதாரம், Barbara Rossi

படக்குறிப்பு, பார்பரா ரோஸ்சி: "கட்டடம் இடிக்கப்படும் இந்த புகைப்படத்தை நான்தான் எடுத்தேன். இது மாற்றத்தை, செயல்பாட்டை மற்றும் அழகைக் காட்டுகிறது"
ஒலேக்சென்ட்ர் நிஸ்ரோஸ்கி: "உலோக அலங்கார வளைவும் ஒரு மரமும் இருக்கின்ற இந்த புகைப்படம், இயற்கையையும், கட்டடக்கலை அழகையும் இணைத்துக் காட்டுகிறது".

பட மூலாதாரம், Oleksandr Nesterovskyi

படக்குறிப்பு, ஒலேக்சென்ட்ர் நிஸ்ரோஸ்கி: "உலோக அலங்கார வளைவும் ஒரு மரமும் இருக்கின்ற இந்த புகைப்படம், இயற்கையையும், கட்டடக்கலை அழகையும் இணைத்துக் காட்டுகிறது".
இந்த புகைப்படத் தொடர் கடந்த கால கட்டடக்கலை புகைப்படக்கலை தொழில்நுட்பங்களின் குறைகள்

பட மூலாதாரம், James Tarry

படக்குறிப்பு, ஜேம்ஸ் தாரி: "இந்த புகைப்படத் தொடர் கடந்த கால கட்டடக்கலை புகைப்படக்கலை தொழில்நுட்பங்களின் குறைகளை, சரியற்றவற்றை பார்ப்பது பற்றியதாகும். காலக்கெடு முடிந்த இந்த கோடாக்கின் இக்டாகுரோம், வேற்றுலக வண்ணங்களை உருவாக்கும் இந்த மிக பெரிய பாளங்களை உற்பத்தி செய்ய தவறுதலாக ரசாயன கலவைகளால் வளர்க்கப்பட்டன. சில கட்டடங்களைபோல இவை தவறுதலாகவும் சவாலுடனும் உருவாக்கப்பட்டவை.
வடத்தாலான பாலத்தின் முன்னால் ஒரு சிற்பம்

பட மூலாதாரம், Oleg Dashkov

படக்குறிப்பு, ஒலெக் டாஷகோவ்: "ரிகாவின் கோபுர சாரளமானது, மழை அல்லது சூரிய ஒளி, ஈரம் அல்லது நல்ல வானிலை என எந்தவொரு பருவகாலத்திலும் தன்னுடைய வரலாற்று பதிவை பராமரிக்கிறது. இந்த வடத்தாலான பாலத்தின் அழகால் அவரது கவனம் சிதறிவிட்டதா என்ன? என்னால் நம்ப முடியவில்லை”.
புலென்ட் சுபெர்க்: "பாரம்பரிய மசூதியாக இல்லாமல் நவீன கட்டடக்கலை".

பட மூலாதாரம், Bulent Suberk

படக்குறிப்பு, புலென்ட் சுபெர்க்: "பாரம்பரிய மசூதியாக இல்லாமல் நவீன கட்டடக்கலை".
ஆண்ணொருவர் செங்கல் எடுக்கையில், பெண் ஒருவர் அவருக்கு பின்னால் வேலை செய்கிறார்

பட மூலாதாரம், Shibasish Saha

படக்குறிப்பு, ஷிபாசிஷ் சஹா: தங்களுடைய தனிப்பட்ட குடும்பங்களுக்கு உணவூட்ட இந்த படத்திலுள்ள ஆண்களும் பெண்களும் கடுமையாக வேலை செய்கிறார்கள். தங்களுடைய வலியை மறந்த பெண்கள், ஆண்களோடு செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர்".
ஒரு புறம் வீடுகளற்ற நிலம். மறுபுறம் நெருங்கி அமைந்திருக்கும் வீடுகள்

பட மூலாதாரம், Marco Grassi

படக்குறிப்பு, மார்க்கொ கிராஸி: 2016 ஜூன் மாதம் தொடங்கி லாருங் கார் என்னுமிடத்தில் அனைத்தும் மாறியிருக்கின்றன. ஆனால், அது யாருக்கும் தெரியாது. முன்பு உலகிலேயே மிகப் பெரிய பௌத்த குடியிருப்பிடமாகவும் நவீன சமூகத்தைவிட தொலைவிலும் இருந்த இவ்விடத்தில், துறவியரும், மடாதிபதிகளும் அமைதியான, செயலற்ற வாழ்க்கை நடத்தினர். தற்போது இவ்விடம் சீன அதிகாரிகளால் இடிக்கப்படுகிறது,
சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அரங்கம்

பட மூலாதாரம், Gina Soden

படக்குறிப்பு, ஜினா சோடன்: "மூரிஷ் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், இத்தாலியில் உள்ள ஒரு கோட்டை இது. இந்த அறைகள் எல்லாம் அழகானதொரு கோட்டையை கட்டி, அதனை ஹோட்டலாக திறக்கும் இலட்சியத்தை வைத்திருந்த ஒருவரின் கைகளால் வடிவமைக்கப்பட்டவை".
ஒன்று இயந்திர சிற்பத்தில் மிதக்கும் சிறிய குழந்தை

பட மூலாதாரம், Naf Selmani

படக்குறிப்பு, நாஃப் செல்மானி: "ஹீவ்-கியு தோட்டங்கள் - தேனீ வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ஓர் அழகான சிற்பம், புகைப்படங்கள் எடுக்க பார்வையாளர் ஒருவர் மேல் தளத்தில் கண்ணாடி தரையில் படுத்திருக்கையில், கீழிருந்து நோக்கப்படுகிறது. இந்த பன்முக உணர்வறியும் அனுபவம்தான் கலையை, அறிவியலை மற்றும் நிலவியல் கட்டடக்கலையை ஒருங்கிணைக்கிறது.
கடினமாக கட்டப்பட்ட ஏணிகளில் ஏறும் தொழிலாளி

பட மூலாதாரம், Enrique Gimenez-Velilla

படக்குறிப்பு, என்ரிக் கிமெனெஸ்-விலில்லா: "வளர்முக நாடுகளில், கட்டங்களை கட்டி, பராமரிக்கின்ற பெயர் அறியப்படாத, எல்லா புத்திசாலி தொழிலாளர்களுக்கும் மரியாதை செலுத்தவே இந்த புகைப்படம்".