பப்புவா நியூ கினியா அருகே நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியா கடற்கரைக்கு அப்பால் 8 என்ற அளவில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

இதன் காரணமாக பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை மையத்திலிருந்து சுனாமி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

மேற்கு பசிஃபிக் பிரதேசம் முழுவதும் பரந்த மற்றும் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியு கினியாவின் கிழக்கிலிருந்து 160 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தொலையுணர்வு கருவிகள் அடையாளம் காட்டியுள்ளன.

இதுவரை பாதிப்பு குறித்த எந்த தகவலும் இல்லை.