You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு டிரம்ப் புகழாரம்
பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரிஃப் மற்றும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலை பாகிஸ்தான் அரசு மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளது.
அது குறித்து, மக்கள் கலவையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ஷெரிஃப் ஒரு உன்னதமான நபர் என்றும் பல வியத்தகு பணிகளை அவர் செய்து வருகிறார் என்றும் டிரம்ப் கூறியதாக அரசு தெரிவித்துள்ளது;
மேலும் "அற்புதமான மக்களை கொண்ட அற்புதமான இடம் பாகிஸ்தான்" எனவே தான் அங்கு விஜயம் செய்ய விரும்புவதாக டிரம்ப் தெரிவித்தார் என அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் டிவிட்டர் பயன்பாட்டாளர்கள், இதுகுறித்து வேடிக்கையாக பல கருத்துக்களை டிவீட் செய்துள்ளனர்.
டிரம்ப் "எதிர்மறை எள்ளல் குறிப்பாக பேசுவதில் திறமையானவர்" என தெரிவித்துள்ளனர்.
சிலர் ரஷிய அதிபர் விளாடிமின் புதினின் புகைப்படத்தை பதிவிட்டு நிஜமாகவா? அப்படியென்றால் நான்? என புதின் கேட்பது போல் நகைச்சுவையாக கேள்வி எழுப்பிழுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் அமெரிக்காவின் நட்பு நாடு இல்லை என்றும் மேலும் பாகிஸ்தான் துரோகம் மற்றும் அவமரியாதை செய்து விட்டது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.