புகைப்பட பிரபலம் ஆப்கன் பெண்மணிக்கு இந்தியாவில் இலவச சிகிச்சை

நேஷனல் ஜியோகிரபிக் இதழின் முகப்பு அட்டையில் படம் வெளியாகி பிரபலமடைந்த பச்சை நிற விழிகள் கொண்ட ஆப்கன் பெண்மணிக்கு இந்தியா இலவச சிகிச்சை அளிக்க இருக்கிறது.

தற்போது தன்னுடைய நாற்பதுகளில் இருக்கும் ஷார்பாத் குலா என்பவர் சிறுமியாக பாகிஸ்தான் அகதிகள் முகாமில் வாழ்ந்தபோது புகைப்படம் எடுக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் சட்டத்திற்கு புறம்பாக வாழ்வதாக கூறி அவரையும், அவருடைய குடும்பத்தையும் கடந்த வாரம் பாகிஸ்தான் நாடு கடத்தியது.

ஆனால், ஆப்கன் அதிபர் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளித்திருக்கிறார்.

பெங்களூருக்கு கொண்டு சென்று அந்த பெண்மணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இந்திய அரசு ஏற்பாடுகளை செய்திருப்பதாக ஆப்கானிஸ்தான் கூறுகிறது.

அந்த பெண்மணியின் கணவரும், மகள்களில் ஒருவரும் இநக்க காரணமாக இருந்த ஹெபடைடிஸ்-சி பாதிப்பு அவருக்கும் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன