தென் கொரிய அதிபர் பதவி விலகக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் சோலில் போராட்டம்

தென் கொரிய தலைநகர் சோலில் உள்ள வீதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு அந்நாட்டு அதிபர் பார்க் குன் ஹையை பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டமாக கருதப்படும் இதில் ஆர்ப்பாட்டகாரர்கள் இசை மற்றும் உரைகளுக்கு ஆரவாரமாக கை தட்டி தங்களுடைய போராட்டத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

அரசாங்கத்தில் அதிகாரபூர்வமாக அங்கம் வகிக்காத ஒருவர் அதிபர் மீது செல்வாக்கு செலுத்தியதை குறித்து வெளியான தகவல்களால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோபமாக உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, அதிபர் பார்க் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது