சீனாவில் காலாவதியான 200 டன் பால் பவுடரை மீண்டும் சந்தையில் விற்க முயற்சித்த 19 பேர் கைது

சீனாவில் காலாவதியான 200 டன் பால் பவுடரை மீண்டும் சந்தையில் விற்பனை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 19 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

ஷாங்காய் நகரில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த பால் பவுடர் சேமிப்பு கிடங்குகளில் காலாவதியாகி இருந்தது.

விற்பனையாகாத பால் பவுடரால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அவர்கள் முயற்சித்ததாக நம்பப்படுகிறது.

இந்த பால் பவுடரை உட்கொண்டு இதுவரை யாரும் நோய்வாய்ப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

ஆனால், சீனாவில் இதுபோன்ற உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பல மோசமான முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளன.