வரலாறு காணாத சரிவு: டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 80ஐ கடந்தது

டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, சாமானியர்களின் பாக்கெட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பைசல் முகமது அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. செவ்வாய்கிழமையன்று முதல் முறையாக ஒரு டாலரின் மதிப்பு 80 ரூபாயை தாண்டியுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சில காலமாக அரசை தாக்கி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியிடம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில், ட்விட்டரில் ஒரு வரைபடத்தை (graph) பகிர்ந்த ராகுல் காந்தி, பழைய அறிக்கை ஒன்றை பிரதமருக்கு நினைவுபடுத்தினார். நரேந்திர மோதி குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தின் அறிக்கை இது.

"நாடு விரக்தியில் மூழ்கியுள்ளது" என்று கூறியது நீங்கள்தானே என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்."அந்தக் காலத்தில் இது குறித்து எவ்வளவு சத்தம் போட்டீர்களோ, இன்று ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டு அந்த அளவிற்கு 'மௌனமாக' இருக்கிறீர்கள்'என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோதியின் அந்த அறிக்கையின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரிநேத்தும் அரசை கடுமையாகத்தாக்கினார். "ரூபாய் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் சரிந்துவரும் பொருளாதாரம் மற்றும் கட்டுப்பாடற்ற பணவீக்கம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் அவர்.

நிலைமையை அரசும் அறிந்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரிசர்வ் வங்கி, ரூபாயின் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. நாணய மாற்று விகிதம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியுடன் அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது," என்றார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

ஆனால் இது ஏன் நடக்கிறது? டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ஏன் வீழ்ச்சியடைகிறது மற்றும் ரூபாயின் மதிப்பை என்ன காரணிகள் தீர்மானிக்கின்றன?

டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, சாமானியர்களின் பாக்கெட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்

பட மூலாதாரம், Getty Images

இப்போது நீங்கள் ஒரு டாலர் வாங்க விரும்பினால், அதற்கு 79 ரூபாய் செலுத்த வேண்டும். இது தொழில்நுட்ப மொழியில் நாணய மாற்று விகிதம் எனப்படும்.

ரூபாய்-டாலரைத் தவிர, மற்ற நாணயங்களுக்கு இடையிலும் இதுபோன்ற விற்றல்-வாங்கல் நடைபெறுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளுக்கு அவற்றின் சொந்த நாணயம் உள்ளது. அதாவது பிரிட்டனின் கரன்சி பவுண்ட், மலேஷியாவின் ரிங்கெட் போல. எனவே யாராவது பிரிட்டனில் இருந்து ஏதாவது வாங்க அல்லது வணிகம் செய்ய அல்லது அங்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அதற்கு அவர்களுக்கு பிரிட்டிஷ் நாணயம் அதாவது பவுண்ட் தேவைப்படும். அவர்கள் பவுண்டுகளை வாங்க வேண்டும்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

ரூபாய் அல்லது வேறு எந்த நாட்டின் நாணயத்தையும் செலுத்தி, தனக்கு தேவைப்படும் நாணயத்தை பெறுவது நாணய மாற்று விகிதம் எனப்படுகிறது.

டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, சாமானியர்களின் பாக்கெட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்

பட மூலாதாரம், Getty Images

நாணயத்தின் மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

நாணய வர்த்தகம் செய்யப்படும் இடம், அந்நியச் செலாவணி சந்தை அல்லது பணச் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

மாற்று விகிதம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அது மாறிக்கொண்டே இருக்கும். 2022 ஜூலையில் பவுண்டுக்கு செலுத்த வேண்டிய தொகை, டிசம்பரிலும் அப்படியே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

இது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ ஆகலாம். இது ஒரு நாணயத்தின் தேவை மற்றும் சப்ளையை பொருத்து இருக்கும்.

ஒரு நாணயத்திற்கான தேவை அதிகமாக இருந்தால், அதன் மதிப்பு அதிகமாக இருக்கும். இப்போது உலகின் பெரும்பகுதி அமெரிக்க நாணயமான 'டாலரில்' வணிகம் செய்வதால், பணச் சந்தையில் எப்போதும் டாலர்களுக்கான தேவை உள்ளது.

இப்போது உங்களுக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ ஏதேனும் நாணயம் தேவைப்படுகிறது அல்லது ஏதேனும் நாணயத்தை விற்க வேண்டியிருக்கிறது என்றால் எங்கே செல்லவேண்டும்? அதற்கான பதில் வங்கி.

டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, சாமானியர்களின் பாக்கெட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்

பட மூலாதாரம், Getty Images

ரிசர்வ் வங்கியிடம் மாற்று வழிகள்?

நியூயார்க்கிலிருந்து (அமெரிக்கா) ஒரு நபர் டெல்லிக்கு வந்து அவருக்கு டாலர்களை விற்க விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு வங்கிக்குச் சென்று டாலருக்கு மாற்றாக ரூபாய் பெறமுடியும்.

எனவே வங்கி என்பது அன்னிய செலாவணி சந்தை அல்லது பணச் சந்தையின் ஒரு சிறிய பிரிவாகும். உலகம் முழுவதும் பல லட்சம் வங்கிகள் உள்ளன. இதனுடன், நாணயத்தை வாங்கவும் விற்கவும் அரசு,வர்த்தகர்களுக்கும், உரிமங்களை வழங்குகிறது. இதுவும் பணச் சந்தையின் ஒரு பகுதியாகும்.

இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களிடம் அந்நியச் செலாவணி இருப்பு வைத்திருக்கின்றன.

இருப்பினும், 1993 ஆம் ஆண்டு முதல், பணச் சந்தையும் மற்ற துறைகளைப் போலவே அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது. சந்தையில் உள்ள தேவை-சப்ளையைப் பொருத்து நாணயத்தின் மதிப்பு இருக்கும். ஆனால் மத்திய வங்கிகள் பணச் சந்தையிலும் அடிக்கடி தலையிடுகின்றன.

அந்நியச் செலாவணி சந்தையில் டாலர் விலை மிக அதிகமாக உயரும்போது தேவைப்பட்டால் ரிசர்வ் வங்கி, பணச் சந்தையில் டாலர்களை விற்று, ரூபாயை வாங்குவதன் மூலம் ரூபாயின் மதிப்பைச் சமன் செய்யலாம்.

டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, சாமானியர்களின் பாக்கெட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்

பட மூலாதாரம், NOAH SEELAM/getty Images

நாணய விலை உயர்வின் விளைவு

இந்தியா போன்ற நாட்டில் கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பெரிய அளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இது தவிர, மின்னணு மற்றும் ராணுவ உபகரணங்களின் ஒப்பந்தங்களும் பெரும்பாலும் அமெரிக்க நாணயத்தில் உள்ளது. எனவே இந்தியாவுக்கு எப்போதும் டாலர் தேவை.

இந்த பொருட்களின் தேவை அதிகமாக இருந்தால், சர்வதேச சந்தையில் அவற்றின் விலை அதிகரிக்கும்.அவற்றின் இறக்குமதிக்கு இந்தியா அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கிறது. போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளில் அதிக விலை கொண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், விலைவாசி உயர்கிறது.

டாலரின் விலை அதிகரிப்பது ஏன்?

கடந்த சில நாட்களாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் மேலும் சரிந்து வருவதாக நாம் கேள்விப்படுகிறோம்.இதற்கு பல காரணங்கள் உள்ளன.

பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை தொடர்ந்து ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததால் பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன. சர்வதேச சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை உயர்ந்தது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவையும் பாதித்தது.

போர் காரணமாக உணவு தானியங்கள், சமையல் எண்ணெய் போன்றவற்றின் சப்ளையும் தடைபட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, சாமானியர்களின் பாக்கெட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்

பட மூலாதாரம், Debarchan Chatterjee/NurPhoto via Getty Images

கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு அதிகமான பணவீக்கத்தை அமெரிக்காவும் ஐரோப்பாவும் சந்தித்துள்ளன.

விலைவாசி உயர்வின் தாக்கத்தில் இருந்து சாமானிய மக்களைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தில் அதன் பாதகமான விளைவுகளைத் தடுக்கவும், அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அரசு பத்திரங்களுக்கு கிடைக்கும் வட்டி அதிகமாகிவிட்டது. ஆனால் வட்டி விகிதத்தை அதிகரிப்பதால், வர்த்தகம் மற்றும் தொழிலுக்காக வாங்கிய கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தியாவிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறிப்பாக இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், தங்கள் பணம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதுவதால், அதை இங்கிருந்து அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்கிறார்கள்.

கடந்த சில மாதங்களில் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான டாலர்கள் முதலீடு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் விளைவாக பணச் சந்தையில் டாலர் சப்ளை பற்றாக்குறை உள்ளது.

வரும் நாட்களில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது நடந்தால் ஒரு டாலருக்கு நீங்கள் இன்னும் அதிக ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கலாம்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :