You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல்: முழு தகவல் 6 காணொளிகளில்
"பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியா அறிவித்தது.
இந்த தாக்குதலில் தற்போது வரை என்ன நிகழ்ந்தது என்பது குறித்த 6 காணொளிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.
முசாஃபராபாத்தில் தாக்குதலுக்குப் பிந்தைய நிலை
பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் மீது தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா அறிவித்தது. முசாஃபராபாத்தில் நடந்த தாக்குதலுக்கு பிந்தைய காணொளியில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளது தெரிகிறது.
தாக்குதலை நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?
இந்தியா நடத்திய தாக்குதலை நேரில் பார்த்த ஹாஜி கசன்ஃபர் அங்குள்ள நிலையை விவரிக்கும் காணொளி இது. மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார் ஹாஜி கசன்ஃபர்.
டிரம்ப் கூறுவது என்ன?
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்கள் குறித்துக் கேட்டபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஓவல் அலுவலகத்துக்குள் வந்துகொண்டிருக்கும்போது, இப்போதுதான் இந்திய தாக்குதல்கள் குறித்துத் தெரிய வந்தது. இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.
பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதல்கள் பற்றி சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்திய தாக்குதலில் சிதைந்த மசூதி - கள நிலவரம் என்ன?
இந்தியா நடத்திய தாக்குதலுக்கு இலக்கான பகுதிகளில் பிலால் மசூதியும் ஒன்று.
அங்குள்ள நிலைமையை விவரிக்கிறார், பிபிசி செய்தியாளர் ஃபர்ஹாத் ஜாவேத்.
மசூத் அசார் யார்?
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக மசூத் அசார் அறிவித்துள்ளார்.
யார் இந்த மசூத்? இவரது கூட்டாளிகளை இந்தியா குறிவைத்தது ஏன்?
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு