போராட்டம் நடத்தும் விவசாயிகள் கண்ணீர்ப்புகை குண்டுகளைச் சமாளிக்கக் கண்டுபிடித்த புதிய உத்திகள் – காணொளி

காணொளிக் குறிப்பு, கண்ணீர்ப்புகை குண்டுகளைச் சமாளிக்கப் போராடும் விவசாயிகள் கண்டுபிடித்த புதிய உத்திகள்
போராட்டம் நடத்தும் விவசாயிகள் கண்ணீர்ப்புகை குண்டுகளைச் சமாளிக்கக் கண்டுபிடித்த புதிய உத்திகள் – காணொளி

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.

வானத்திலிருந்து ட்ரோன்கள் மூலமாக கண்ணீர் புகை குண்டுகள் மழையாய் பொழிகின்றன.

ஒரு வார காலத்திற்கும் அதிகமாக பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் விவசாயிகள், கண்ணீர் புகை குண்டுகளை எதிர்கொள்வதற்கான எளிய வழியை கண்டுபிடித்துள்ளனர். சாக்கு பைகளை தண்ணீரில் நனைத்து பயன்படுத்துவது தான் அது.

விவசாயிகள் இதற்காக ஷம்பு எல்லையில் பல டாங்கர்களை நிறுத்தி வைத்துள்ளனர். சாக்குபைகளை நனைப்பதற்காக தன்னார்வலர்கள் இதிலிருந்து சிறிய கேன்களில் தொடர்ந்து தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.

இதன் மூலமும் புகையின் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், அந்த வேலையை இந்த பெரிய மின்விசிறி செய்துவிடுகிறது.

கண்களில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும் கண்ணீர் புகையின் வீரியத்தை இது நன்றாக குறைத்துவிடுகிறது. கண்ணீர் புகை குண்டை எதிர்கொள்ளும் உத்திகள் இத்துடன் முடியவில்லை.

முல்தானி மிட்டியை பலரும் அழகை மேம்படுத்தும் சாதனமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு இது ஒரு கவசமாக செயல்படுகிறது. இங்கு டூத் பேஸ்ட் என்பது பல் துலக்குவதற்கு மட்டுமல்ல. பாதுகாப்பிற்காகவும் தான்.

போராட்டம் நடத்தும் விவசாயிகள் கண்ணீர்ப்புகை குண்டுகளைச் சமாளிக்கக் கண்டுபிடித்த புதிய உத்திகள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)