தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் தேர்தல் - கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கும் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை அல்ல, கடந்த காலங்களில் முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன.
நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியாகும்
தமிழ்நாட்டில் நிலை என்ன?
சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ் கருத்துக்கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணி 145 முதல் 160 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 50 முதல் 65 இடங்களையும், தவெக 13 முதல் 18 இடங்களைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 5 - 8 இடங்களில் வெல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சதவீதம்:
திமுக கூட்டணி - 42 - 46%
அதிமுக கூட்டணி - 36 - 40%
தவெக - 12 - 16%
மற்றவர்கள் - 4 - 6%

பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமாக இடங்களைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி மற்றும் கட்சிகள் பெறும் இடங்கள்:
திமுக கூட்டணி - 125 - 145
அதிமுக கூட்டணி - 65 - 80
தவெக - 18 - 24
மற்றவர்கள் - 2 - 6
வாக்குச் சதவீதம்:
திமுக கூட்டணி - 38.4%
அதிமுக கூட்டணி - 31.5%
தவெக - 23.6%
மற்றவர்கள் - 6.6%
மேட்ரிஸ் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு முன்னிலை கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி மற்றும் கட்சிகள் பெறும் இடங்கள்:
திமுக கூட்டணி - 122 - 132
அதிமுக கூட்டணி - 87 - 100
தவெக - 10 - 12
மற்றவர்கள் - 0 - 6
வாக்குச் சதவீதம்:
திமுக கூட்டணி - 40.3%
அதிமுக - 37.1%
தவெக - 17.5%
மற்றவர்கள் - 5.1%

பட மூலாதாரம், Getty Images
பி மார்க் கருத்துக்கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அதிக அளவிலான இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி மற்றும் கட்சிகள் பெறும் இடங்கள்:
திமுக கூட்டணி - 125 - 145
அதிமுக கூட்டணி - 65 - 85
தவெக - 16 - 26
மற்றவர்கள் - 1 - 6
தமிழ்நாட்டில் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 118 ஆகும்
ஆக்சிஸ் மை இந்தியா தமிழ்நாட்டிற்கு வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தவெக முன்னிலை வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
வாக்குச் சதவீதம்:
திமுக கூட்டணி - 35%
தவெக - 35%
அதிமுக கூட்டணி - 23%
நாதக - 3%
மற்றவர்கள் - 4%
இடங்கள்:
திமுக கூட்டணி - 92 - 110
தவெக - 98 - 120
அதிமுக கூட்டணி - 22 - 32
நாதக - 0
மற்றவர்கள் - 0

பட மூலாதாரம், Getty Images
புதுச்சேரியில் நிலை என்ன?
புதுச்சேரி சட்டமன்றத்தின் 30 இடங்களுக்கு பெரும்பான்மை பெற 16 இடங்கள் தேவை.
ஆக்சிஸ் மை இந்தியா தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், பாஜக கூட்டணி 16 முதல் 20 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 8 இடங்களையும், மற்றவை 3 முதல் 7 இடங்களையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி பாஜக கூட்டணி 16 முதல் 19 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 10 முதல் 12 இடங்களிலும் மற்றவர்கள் 1-இல் இருந்து 2 இடங்கள் வரை பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் நிலை என்ன?

கேரளத்தை பொருத்தவரை பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூ.டி.எஃப்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை (எல்.டி.எஃப்) விட சற்று அதிக இடங்களைப் பெறும் என தெரிவிக்கின்றன.
இங்கு பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 71 ஆகும்.
ஆக்சிஸ் மை இந்தியா
காங்கிரஸ் கூட்டணி - 78 - 90
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி - 46 - 62
பாஜக கூட்டணி - 0 - 3
மேட்ரிஸ்
காங்கிரஸ் கூட்டணி- 75 - 85
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி - 60 - 65
பாஜக கூட்டணி - 3 - 5
பீப்பிள்ஸ் பல்ஸ்
காங்கிரஸ் கூட்டணி - 70 - 85
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி- 55 - 65
பாஜக கூட்டணி - 0 - 3
பி மார்க்
காங்கிரஸ் கூட்டணி - 71 - 79
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி - 62 - 69
பாஜக கூட்டணி - 1 - 4
மேற்கு வங்கத்தில் நிலை என்ன?

மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வேறுபட்ட முடிவுகளைக் கொடுத்துள்ளன. இங்கு பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 148 ஆகும்.
பி மார்க்:
திரிணாமுல் காங்கிரஸ் - 118 - 138
பாஜக - 150 - 175
மற்றவர்கள் - 3 - 6
மேட்ரிஸ்:
திரிணாமுல் காங்கிரஸ் - 125 - 140
பாஜக - 146 - 161
மற்றவர்கள் - 3 - 6
பீப்பிள்ஸ் பல்ஸ்:
திரிணாமுல் காங்கிரஸ் - 178 - 189
பாஜக - 95 - 110
காங்கிரஸ் - 1 - 3
இடதுசாரி - 0 - 1
சாணக்யா ஸ்ட்ராடஜிஸ்:
திரிணாமுல் காங்கிரஸ் - 130 - 140
பாஜக - 150 - 160
மற்றவர்கள் - 6 - 10
அசாமில் நிலை என்ன?

அசாம் மாநிலத்தைப் பொருத்தவரை பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களைப் பெறும் எனத் தெரிவிக்கின்றன. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களின் எண்ணிக்கை 64 ஆகும்.
ஆக்சிஸ் மை இந்தியா
பாஜக கூட்டணி - 88 - 100
காங்கிரஸ் கூட்டணி - 24 - 36
ஜேவிசி
பாஜக கூட்டணி - 88 - 101
காங்கிரஸ் கூட்டணி - 23 - 33
மற்றவர்கள் - 2 - 5
பி மார்க்
பாஜக கூட்டணி - 82 - 94
காங்கிரஸ் கூட்டணி - 30 - 40
மற்றவர்கள் - 1 - 5
மேட்ரிஸ்
பாஜக கூட்டணி - 85 - 95
காங்கிரஸ் கூட்டணி - 25 - 32
மற்றவர்கள் - 6 - 12
பீப்பிள்ஸ் பல்ஸ்
பாஜக கூட்டணி - 68 - 72
காங்கிரஸ் கூட்டணி - 22 - 26
மற்றவர்கள் - 11 - 15
தமிழ்நாட்டில் 85% மேல் வாக்கு பதிவு
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 4,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் கண்டனர். தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டில் மாநில கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தனித்தும் தேர்தலைச் சந்தித்தன. இவர்கள் போக ராமதாஸ் மற்றும் சசிகலா கூட்டணி அமைத்தனர்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக 85 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி தேர்தலைச் சந்திக்கின்றன. கடந்து பத்து ஆண்டுகளாக இடது ஜனநாயக முன்னணி கேரளத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது. காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேர்தலைச் சந்திக்கின்றன, இவர்கள் போக தமிழக வெற்றிக் கழகமும் நாம் தமிழர் கட்சியும் புதுச்சேரியில் போட்டியிட்டது.

பட மூலாதாரம், Getty Images
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2011-இல் இருந்து ஆட்சியில் இருந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. இவர்கள் போக காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.
அதே போல் அசாம் மாநிலத்தில் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியிலிருந்து வருகிறது. பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே பிரதான போட்டி நிலவுகிறது. இவை போக மற்ற மாநில கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றான.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































